புற்றுநோயை தடுப்பது முதல் மனச்சோர்வை நீக்குவது வரை.. பிளாக் காபி குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

By Ramya s  |  First Published Jul 1, 2023, 2:34 PM IST

கலோரிகள், கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ள பானத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், பிளாக் காபி உங்களுக்கு சரியான பானமாகும்.


பால் சேர்க்கப்படும் காபியை விட பலரும் பிளாக் காபியை பலரும் விரும்புகிறார்கள். உண்மையில், இன்னும் சிலருக்கு, பிளாக் காபி என்பது அன்றாட உணவின் ஒரு பகுதியாகும். எனவே பிளாக் காபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள், உடல் எடையை குறைப்பதில் இது உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து பார்க்கலாம். 

கலோரிகள், கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ள பானத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், பிளாக் காபி உங்களுக்கு சரியான பானமாகும். அதாவது, பால், சர்க்கரை, க்ரீம் போன்றவற்றுடன் தொடர்ந்து குடிக்கும் போதுதான் காபி குடிப்பது கவலைக்குரியதாகிறது. ஒரு கப் காபியில் கூட கூடுதல் பெரிய கேக் துண்டில் உள்ள கலோரிகள் இருக்கும். ஆனால் பிளாக் காபியை பொறுத்த வரை கலோரிகள், கொழுப்புகள் மிக மிக குறைவு. பிளாக் காபியின் நன்மைகள் குறித்து பார்க்கலாம். 

Tap to resize

Latest Videos

மனநிலையை மேம்படுத்தும் :

பிளாக் காபி நரம்பு மண்டலத்தைத் தூண்டுகிறது, டோபமைன் மற்றும் நோர்பைன்ப்ரைன் போன்ற நரம்பியக்கடத்திகளின் வெளியீட்டை அதிகரிக்கிறது, இது 'மகிழ்ச்சியான இரசாயனங்கள்' என்று அழைக்கப்படும் ஹார்மான்களை சுரக்க உதவுகிறது, இது உங்களை மகிழ்ச்சியாகவும் நேர்மறையாகவும் உணர வைக்கிறது. பிளாக் காபியில் உள்ள காஃபின் மூளையில் உற்சாகத்தை அதிகரிக்கிறது, மனநிலையை மேம்படுத்துகிறது. மேலும் அறிவாற்றல் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் அதிக உற்பத்தி சூழலை எளிதாக்குகிறது.

மன அழுத்தத்தை குறைக்கிறது : 

பிளாக் காபியின் ஆண்டிடிரஸன் விளைவு மூளையில் செரோடோனின் மற்றும் டோபமைனின் அளவை அதிகரிக்கும் திறனில் இருந்து உருவாகிறது, இதனால் சோகம், துக்கம் மற்றும் தனிமை போன்ற மனச்சோர்வு அறிகுறிகளை எதிர்க்கிறது. கூடுதலாக, காபியில் குளோரோஜெனிக் அமிலம், ஃபெருலிக் அமிலம் மற்றும் காஃபிக் அமிலம் உள்ளது. இந்த அமிலங்கள் மனச்சோர்வு உள்ளவர்களின் மூளையில் ஏற்படும் நரம்பு செல்களின் வீக்கத்தைக் குறைக்க உதவுவதோடு, அசௌகரியம் மற்றும் துயரத்தைத் தணிக்கிறது.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

பிளாக் காபியை வழக்கமாக உட்கொள்வது ஆரம்பத்தில் உங்கள் இரத்த அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுக்கும், ஆனால் இந்த விளைவு காலப்போக்கில் குறைகிறது. ஒவ்வொரு நாளும் ஒன்று முதல் இரண்டு கப் பிளாக் காபி குடிப்பதால் பக்கவாதம் உள்ளிட்ட இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நினைவாற்றலை மேம்படுத்துகிறது

நினைவகத்தை மேம்படுத்த பிளாக் காபி சிறந்ததாக அறியப்படுகிறது. நாம் வயதாகும்போது, ​​நமது அறிவாற்றல் திறன் பாதிக்கப்படும், மேலும் அல்சைமர், டிமென்ஷியா மற்றும் பார்கின்சன் நோய்கள் போன்ற நினைவாற்றல் தொடர்பான நோய்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். தொடர்ந்து பிளாக் காபி குடிப்பது, உங்கள் நரம்புகளை சுறுசுறுப்பாக வைத்து, மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலம் இவற்றை எதிர்த்துப் போராட உதவும்.

கல்லீரலுக்கு நல்லது

உங்கள் கல்லீரல் உங்கள் உடலின் பல செயல்பாடுகளைக் கொண்ட ஒரு முக்கிய உறுப்பு. பிளாக் காபியை தொடர்ந்து உட்கொள்வது இரத்தத்தில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் கல்லீரல் நொதிகளின் அளவைக் குறைக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது புற்றுநோய், கொழுப்பு கல்லீரல், ஹெபடைடிஸ் மற்றும் ஆல்கஹால் சிரோசிஸ் போன்ற பல கல்லீரல் பிரச்சனைகளைத் தடுக்கிறது.

வயிற்றை சுத்தப்படுத்த உதவுகிறது

காபி ஒரு டையூரிடிக் பானமாகும், அதாவது நீங்கள் எவ்வளவு அதிகமாக உட்கொள்கிறீர்களோ, அவ்வளவு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் உடலில் உள்ள நச்சுகள் மற்றும் பாக்டீரியாக்கள் வெளியேறி உங்கள் வயிற்றை சுத்தப்படுத்தி உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

புற்றுநோய் அபாயத்தைத் தடுக்க உதவும்

உங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க பிளாக் காபி சிறந்தது, இது புற்றுநோய் கட்டி வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது. பிளாக் காபியை தொடர்ந்து உட்கொள்வது கல்லீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் மற்றும் மலக்குடல் புற்றுநோய் போன்ற சில வகையான புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன 

பிளாக் காபியில், உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் பி2, பி3 மற்றும் பி5 போன்ற வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் மாங்கனீசு ஆகியவை கருப்பு காபியில் காணப்படுகின்றன. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் நம் உடலில் திரவ அளவை பராமரிக்கிறது மற்றும் இரத்த அழுத்தத்தை ஆதரிக்கிறது. பல்வேறு வைட்டமின்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தை உயிர்ப்பிக்கிறது.

சருமத்திற்கு நல்லது 

பிளாக் காபியில் உள்ள காஃபின் இரத்த நாளங்களை பெரிதாக்குகிறது, சருமத்தில் உள்ள பள்ளங்களை மென்மையாக்குகிறது மற்றும் சருமத்தை இறுக்கமாக்குகிறது. பெரிய இரத்த நாளங்கள் என்றால் அந்த பகுதியில் அதிக இரத்தம் பாய முடியும், எனவே அதிக ஊட்டச்சத்துக்கள் வந்து சருமம் நச்சுகளை அகற்றி செழித்து வளர எளிதாகிறது.

click me!