புகுஷிமா முதல் பாம்புகள் தீவு வரை.. உலகின் மிகவும் ஆபத்தான இடங்கள் பற்றி தெரியுமா?

By Ramya s  |  First Published Jul 11, 2023, 2:06 PM IST

பூமியில் உள்ள மிகவும் ஆபத்தான இடங்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.


இந்த உலகம் எண்ணற்ற பிரம்மிப்பூட்டும் மற்றும் அழகான இடங்கள் உள்ளன. ஆனால் ஒரு சில இடங்கள் ஆபத்தான இடங்களாகவும் கருதப்படுகின்றன. அணுசக்தி பேரழிவு தளங்கள் முதல் விஷப்பாம்புகள் நிறைந்த நிலப்பரப்பு வரை, இந்த இடங்கள்  குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகின்றன. ஃபுகுஷிமாவில் நீடித்திருக்கும் கதிர்வீச்சு, எவரெஸ்ட் சிகரத்தின் கொடிய சவால்கள் என எதுவாக இருந்தாலும், இந்த இடங்கள் ஆபத்தான இடங்களாக உள்ளன. எனவே பூமியில் உள்ள மிகவும் ஆபத்தான இடங்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

புகுஷிமா, ஜப்பான்

Tap to resize

Latest Videos

2011 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியை தொடர்ந்து புகுஷிமா டெய்ச்சி அணுசக்தி பேரழிவு ஏற்பட்டது. சேதமடைந்த அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்க கசிவு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது. கதிர்வீச்சின் நீண்டகால விளைவுகள் கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகின்றன, மேலும் இப்பகுதி பெரும்பாலும் வாழத் தகுதியற்றதாக உள்ளது.

ஜடாயு பூமி மையம் : கின்னஸ் சாதனை படைத்த பிரம்மாண்ட பறவை சிலை.. கண்டிப்பாக ஒருமுறையாவது பார்க்க வேண்டிய இடம்

எவரெஸ்ட் சிகரம், நேபாளம்

உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரம் பல தசாப்தங்களாக சாகசப் பயணிகளை கவர்ந்துள்ளது. இருப்பினும், இது பூமியில் மிகவும் ஆபத்தான இடங்களில் ஒன்றாகும். அதீத உயரம், கணிக்க முடியாத வானிலை மற்றும் நிலப்பரப்பு ஆகியவை எவரெஸ்ட் சிகரத்தை ஏறுவது மிகவும் ஆபத்தான முயற்சியாக ஆக்குகின்றன. இதனால் இந்த மலையில் ஏற முயற்சிக்கும் பலரின் உயிரை பறிக்கிறது.

டானகில் பாலைவனம், எத்தியோப்பியா

எத்தியோப்பியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள டானகில் பாலைவனம் அதன் வெப்பமான வெப்பநிலை, செயலில் உள்ள எரிமலைகள் மற்றும் நச்சு வாயுக்களுக்கு பெயர் பெற்றது. அங்கு சராசரி வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸ் (113 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக இருப்பதால், அது பூமியின் வெப்பமான இடங்களில் ஒன்றாகும். எனவே அதீத வெப்பம் மற்றும் எரிமலைச் செயல்பாடுகள் ஆபத்தான இடமாக மாற்றுகிறது.

மரண பள்ளத்தாக்கு, அமெரிக்கா

கலிபோர்னியாவில் அமைந்துள்ள மரனப் பள்ளத்தாக்கு அமெரிக்காவின் வெப்பமான, வறண்ட மற்றும் தேசிய பூங்காவாக அறியப்படுகிறது. கடுமையான வெப்பம், மட்டுப்படுத்தப்பட்ட நீர் ஆதாரங்கள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு ஆகியவை பார்வையாளர்களுக்கு குறிப்பிடத்தக்க அபாயங்களை ஏற்படுத்துகின்றன. நீரிழப்பு மற்றும் வெப்பம் தொடர்பான நோய்களால் அங்கு செல்லும் மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

பாம்பு தீவு, பிரேசில்

பொதுவாக பாம்பு தீவு என்று அழைக்கப்படும் இல்ஹா டா குயிமாடா கிராண்டே தீவு பிரேசில் கடற்கரையில் மக்கள் வசிக்காத ஒரு தீவு ஆகும். உலகிலேயே மிகவும் கொடிய பாம்புகளில் ஒன்றான கோல்டன் லான்ஸ்ஹெட் இங்குதான் உள்ளது. ஒரு சதுர மீட்டருக்கு ஒரு பாம்பு என இந்த தீவில் பாம்புகள் நிறைந்திருக்கும்.

அகிகஹாரா காடு, ஜப்பான்

புஜி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அயோகிகஹாரா காடு "தற்கொலை காடு" என்று புகழ் பெற்றது. அதன் எல்லைக்குள் நிகழும் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகளுக்காக இந்த காடு அறியப்படுகிறது. காடுகளின் அடர்ந்த தாவரங்கள் மற்றும் அமானுஷ்யமான அமைதி ஆகியவை அந்த இடத்தை ஆபத்தான இடமாக மாற்றுகிறது.

செர்னோபில் விலக்கு மண்டலம், உக்ரைன்:

1986 இல் பேரழிவுகரமான செர்னோபில் அணுசக்தி பேரழிவைத் தொடர்ந்து, அணுமின் நிலையத்தைச் சுற்றி ஒரு பெரிய விலக்கு மண்டலம் நிறுவப்பட்டது. இப்பகுதி கதிரியக்கத்தால் மிகவும் மாசுபட்டுள்ளது, இதனால் மனிதர்கள் வசிக்க தகுதியற்ற இடமாக உள்ளது. 

முகேஷ் அம்பானி வீட்டில் 600 பணியாளர்கள்.. அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

click me!