மழைக்காலம் வந்துவிட்டாலே, வீட்டில் பூச்சிகள், ஈக்கள், எறும்புகளின் எண்ணிக்கை அதிகமாகும்.
தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், நாட்டின் சில இடங்களில் சாரல் மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. மழைக்காலம் வந்துவிட்டாலே, வீட்டில் பூச்சிகள், ஈக்கள், எறும்புகளின் எண்ணிக்கை அதிகமாகும். இந்த எறும்புகள் உணவில் நுழைந்தால், அது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த பிரச்சனை கிட்டத்தட்ட எல்லா பருவங்களிலும் காணப்பட்டாலும் மழைக்காலங்களில் எறும்புகளின் தொந்தரவு அதிகமாக இருக்கும். எனவே இந்த எறும்புகளை விரட்டுவது இல்லத்தரசிகளுக்கு சவாலான பணியாக இருக்கும். எனவே இந்த எறும்புகளை விரட்ட பயனுள்ளதாக சில குறிப்புகளை தற்போது பார்க்கலாம்.
கரப்பான் பூச்சி தொல்லையா? இந்த டிப்ஸ் உங்களுக்கு உதவும்..!!
வெள்ளை வினிகர்:
மழைக்காலத்தில் வீட்டிற்குள் வரும் எறும்புகளை விரட்ட வெள்ளை வினிகர் பயனுள்ளதாக இருக்கும். எறும்புகளை விரட்ட வெள்ளை வினிகருடன் சிறிது தண்ணீர் கலக்கவும். பின்னர் இந்த கலவையை சமையலறை மற்றும் எறும்புகள் எங்கிருந்து வருகிறதோ அங்கெல்லாம் தெளிக்க வேண்டும். இதனால் சில நிமிடங்களில் எறும்புகள் ஓடிவிடும். சுவரில் எறும்புகள் இருந்தால், இந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் வைத்து எறும்புகள் மீது தெளிக்கவும்.
மாவு மற்றும் உப்பு :
மாவு மற்றும் உப்பு இரண்டும் எறும்புகளை விரட்ட பயனுள்ளதாக இருக்கும். எறும்புகள் இருக்கும் இடத்தில் மாவை வைத்தால், சில நிமிடங்களில் எறும்புகள் மறைந்துவிடும். எறும்புகளை விரட்ட உப்பையும் பயன்படுத்தலாம். மாவுக்குப் பதிலாக உப்பைப் பயன்படுத்தினாலும், அது பயனுள்ளதாக இருக்கும். வீட்டில் எறும்புகள் வராமல் இருக்க வேண்டுமானால், எறும்புகள் வீட்டிற்குள் நுழையும் கதவுகள் மற்றும் ஜன்னல்களில் எறும்புகள் நுழையாதவாறு உப்பை போடலாம். இதன் மூலம் எறும்புகள் வருவதை தடுக்க முடியும்.
எலுமிச்சை மற்றும் தண்ணீர்:
எறும்புகளை விரட்ட ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தண்ணீர் சேர்த்து அதில் எலுமிச்சையை பிழியவும். பிறகு இந்த கலவையை எறும்புகள் இருக்கும் இடத்தில் தெளிக்கவும். இதனால் எறும்புகள் அந்த இடத்தை விட்டு வெளியேறும்.
Monsoon Health Tips: மழைக்காலம் வந்தாச்சி; ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ் இதோ..!!