
நீங்கள் எவ்வளவு தான் விலையுயர்ந்த கூந்தல் மற்றும் சரும தயாரிப்புகளை பயன்படுத்தினாலும், ஆரோக்கியமான கூந்தல் மற்றும் சரும பராமரிப்பானது முதலில் உடலின் உள்ளிருந்துதான் தொடங்குகிறது. ஆம், நாம் சாப்பிடும் உணவு நம்மை இளமையாகவும், பொலிவான தோற்றத்தை பராமரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. இதற்கு கீரைகளைத் தவிர சில கொட்டைகள் மற்றும் விதைகள் உங்களுக்கு உதவும்.
அந்த வகையில், சியா விதைகள் மற்றும் ஆளி விதைகளை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை இரண்டுமே ஆரோக்கியமான முடி வளர்ச்சி மற்றும் பளபளப்பான சருமத்திற்கு உதவும். ஆனால் இந்த இரண்டில் எது சிறந்தது என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறதா? அதற்கான பதிலை இந்த பதிவில் பார்க்கலாம்.
சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு சியா விதைகள் நன்மைகள் :
- சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அவை வீக்கத்தை குறைக்கவும், உச்சந்தலை ஆரோக்கிய மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
- இதில் இருக்கும் நல்ல ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து சருமம் மற்றும் முடி சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது. சியா விதைகளில் துத்தநாகம், இரும்புச்சத்து போன்ற தாதுக்கள் உள்ளன. அவை கூந்தல் வளர்ச்சி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
- சியா விதைகளில் இருக்கும் புரதம் மற்றும் அமினோ அமிலங்கள் முடியை வலிமையாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- சியா விதைகளில் நார்ச்சத்து மிக அதிகமாக உள்ளது. அது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மறைமுகமாக சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.
- சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி ஜெல்லை உருவாக்குவதில் சிறந்தது. இது சருமத்தை நீரேற்றமாக வைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் உச்சந்தலையில் வறட்சி ஏற்படுவதை தடுக்கவும், ஈரப்பதத்தை தக்க வைக்கவும் உதவுகிறது.
- சியா விதைகள் சருமத்தில் தெளிவை மேம்படுத்தவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கவும், நெகிழ்ச்சி தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் முடியை வலுப்படுத்தவும், முடி உடைவதை தடுக்கவும், உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
பயன்படுத்தும் முறை : நீரில் ஊறவைத்து குடிக்கலாம் அல்லது பழங்கள், ஸ்மூத்திகள், தயிரில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
குறிப்பு : செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது.
சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு ஆளி விதைகள் நன்மைகள் :
சியா விதைகளை ஒப்பிடுகையில் ஆளி விதையில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சற்று அதிகமாகவே உள்ளன. இது வீக்கத்தை குறைக்கிறது மற்றும் சருமத்தை மேம்படுத்துகிறது.
- ஆளி விதைகளில் வைட்டமின் ஈ மற்றும் லிக்னான்கள் என்ற ஒரு வகையான தாவர ஆக்சிஜனேற்றி நிறைந்துள்ளன. இவை சருமத்தின் வயதான தன்மை, நெகிழ்ச்சித்தன்மை மற்றும் அதிகப்படியான எண்ணெய் ஆகியவற்றை போக்க உதவுகிறது.
- ஆளி விதையில் புரதம் இருந்தாலும் அதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து அதன் பலனை பெறலாம்.
- ஆளி விதைகள் நல்ல நார்ச்சத்து மூலமாகும். இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் உட்புற வீக்கத்தை குறைக்கிறது. இது தவிர சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
- ஆளி விதையில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது.
- முகப்பருவை குறைக்கவும், சருமத்தின் வயதான அறிகுறியை தடுக்கவும் ஆளி விதைகள் உதவுகிறது. இது தவிர ஆரோக்கியமான முடி வளர்ச்சி மற்றும் கூந்தல் பளபளப்பை அதிகரிக்கவும் உதவும்.
பயன்படுத்தும் முறை : ஆளி விதைகளை இடித்து அல்லது பொடியாக்கி சாப்பிடலாம் இல்லையெனில் ஸ்மூத்திகள் மற்றும் தயிரில் சேர்த்துக் கொள்ளலாம்.
குறிப்பு : சியா விதைகளை விட ஆளி விதைகளை குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது.
எது சிறந்தது?
ஆளி விதைகள் மற்றும் சியா விதைகள் இவை இரண்டுமே கூந்தல் மற்றும் சறுமாறுகிறது மிகவும் நன்மை பயக்கும். ஆனாலும் உங்களது ஆரோக்கிய குறிக்கோள்களை பொறுத்து இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யுங்கள். இல்லையெனில் இரண்டையுமே உங்களது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.