சுத்த சைவம்ங்க… நம்புங்க…ஆனந்த் மகிந்திராவின் ட்விட்டர் பதிவுக்கு அமோக வரவேற்பு ....

Selvanayagam P   | others
Published : Jan 06, 2020, 09:55 PM IST
சுத்த சைவம்ங்க… நம்புங்க…ஆனந்த் மகிந்திராவின் ட்விட்டர் பதிவுக்கு அமோக வரவேற்பு ....

சுருக்கம்

ஆனந்த் மகிந்திரா தனது டிவிட்டரில் பதிவிட்ட ஒரு உணவகத்தின் சுத்த சைவ மெனு டிவிட்டர்வாசிகளிடம் பெருத்த வரவேற்பு பெற்றுள்ளது. 

வர்ததகத்தில் கொடி கட்டி பறக்கும் மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா டிவிட்டரிலும் பிரபலமானவர். அவரை லட்சக்கணக்கான பேர் டிவிட்டரில் பின்தொடருகின்றனர். 

ஆனந்த் மகிந்திராவின் டிவிட்டுகள் பெரும்பாலும், அறிவுபூர்வ, ஆக்கப்பூர்வமான மற்றும் வித்தியாசமாகவும், ஆச்சரியங்கள் அளிக்கும் விதங்களில் இருக்கும். இதற்காகவே டிவிட்டரில் அவரை பின்தொடருகிறார்கள்.

அந்த வகையில் ஆனந்த் மகிந்திரா சமீபவத்தில் போட்ட ஒரு டிவிட் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அப்படி என்ன டிவிட்ன்னு பார்க்கிறீங்களா, ஆனந்த் மகிந்திரா ஒரு ஹோட்டலின் மெனுவை பகிர்ந்துள்ளார். 

சுத்த சைவம் என்று சொல்லும் அந்த உணவகத்தின் மெனுவை பார்த்தால் அதற்கு முரணாக உள்ளது. மெனுவில், வெஜ் பிஷ் ப்ரை, வெஜ் சிக்கன் ரைஸ் மற்றும் மட்டன் தோசை என உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. 

இது குறித்து ஆனந்த் மகிந்திரா டிவிட்டரில், பிரம்மிக்க வைக்கும் இந்தியா உண்மையில் எப்படி இருக்கிறது என்பது ஒரு உதாரணம். ஒரு விஷயத்தின் மீது மனதின் சக்தியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பல நூற்றாண்டுகளாக அறிந்து வைத்திருக்கிறோம். சைவம், அசைவம் என்ன வித்தியாசம், இது எல்லாமே மனதுதான் என அதில் பதிவு செய்து இருந்தார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Armpit Acne : அக்குளில் வரும் குட்டிப் பருக்களை நீக்கும் சிம்பிளான வீட்டு வைத்திய குறிப்புகள்
Heart Disease : உங்களுக்கு 40 வயசா? அப்ப இந்த '3' பழக்கங்களை உடனே நிறுத்துங்க.. இதய பிரச்சனைல கொண்டு விடும்