திரெளபதி இயக்குனர் மோகன் ஹெச்.ராஜாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ..! கதறுவார்களாம் போராளீஸ்..!

thenmozhi g   | Asianet News
Published : Jan 06, 2020, 07:36 PM IST
திரெளபதி இயக்குனர் மோகன் ஹெச்.ராஜாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ..! கதறுவார்களாம் போராளீஸ்..!

சுருக்கம்

பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவை திரௌபதி திரைப்பட இயக்குனர் மோகன் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். 

திரெளபதி இயக்குனர் மோகன் ஹெச்.ராஜாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோ..! கதறுவார்களாம் போராளீஸ்..! 

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன் இரண்டாவது படமான திரெளபதி படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. காரணம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மற்றொரு சாதியினர் நடத்தும் நாடகக் காதலை படமாக்கி இருப்பதாக படக்குழு விளக்கம் அளித்தது.

அத்துடன் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள வசனங்களும், காட்சிகளும் மற்றொரு தரப்பை சுட்டிக்காட்டும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இதனால் மற்றொரு தரப்பு அதிர்ச்சியடைந்தது. இந்நிலையில், சாதி ஆணவப் படுகொலையை ஆதரிக்கும் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கியது எப்படி?" திரெளபதி படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். 

இதனால் திரெளபதி படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது. வழக்கை எதிர்கொண்டு படக்குழு திரைப்படத்தை ரிலீஸ் செய்யுமா? என்கிற குழப்பம் ஏற்பட்டுள்ளது. திரெளபதி திரைப்படம் பற்றி பல்வேறு விவாதங்கள் நடந்து வரும் நிலையில், போலி பதிவு திருமணம் தொடர்பாக 2014ஆம் ஆண்டு நடந்த வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் திரௌபதி என படக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். 

இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜாவை திரௌபதி திரைப்பட இயக்குனர் மோகன் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பலரும் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு உள்ளதால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து உள்ளது. மேலும், ஒரு சிலர் ராமதாஸ் உடன் போட்டோ எடுத்து இருந்தால் கூட ஒன்னும் சொல்ல மாட்டாங்க.. ஆனால் ஹெச். ராஜா உடன் போட்டோ எடுத்து உள்ளார்..போராளீஸ் கதற போறாங்க என பதிவிட்டு உள்ளனர்
 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்