கவர்னர் தமிழிசையா இது..? பிடித்த மஞ்சள் நிற உடையில்... சிங்க நடையில்...! அடுத்த லெவல் மாஸ்..!

thenmozhi g   | Asianet News
Published : Jan 06, 2020, 06:58 PM IST
கவர்னர்  தமிழிசையா இது..? பிடித்த மஞ்சள் நிற உடையில்... சிங்க நடையில்...! அடுத்த லெவல் மாஸ்..!

சுருக்கம்

தெலுங்கானா மாநில கவர்னராக அவர் பதவி ஏற்றபின் பின், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் எடுக்கப்படும் புகைப்படங்கள் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கவர்னர் தமிழிசையா இது..? பிடித்த மஞ்சள் நிற உடையில்... சிங்க நடையில்...! அடுத்த லெவல் மாஸ்...!  

தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை கட்சிக்காக இரவு பகல் பாராமல் அயராது பாடுபட்டவர். விடியக்காலை வீட்டிலிருந்து கிளம்பினால் விமான நிலையத்தில் பேட்டி, மதுரையில் நிகழ்ச்சி, அடுத்த நொடியே மக்கள் சந்திப்பு, மீண்டும் இரவு வீடு வந்து சேர காலதாமதமாகும். அந்த அளவுக்கு அவர் உறக்கத்தை எல்லாம் விட்டுவிட்டு அயராது பாடுபட்டவர்.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் "தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்" என்ற வாக்கியத்தை ஐகானாக உருவாக்கியவர் தமிழிசை சௌந்தரராஜன். இந்த நிலையில்  தெலுங்கானா மாநில கவர்னராக அவர் பதவி ஏற்றபின் பின், அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் எடுக்கப்படும் புகைப்படங்கள் தற்போது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

காரணம் ஒவ்வொன்றும் அவ்வளவு அழகான புகைப்படங்கள்... பார்ப்பதற்கு கம்பீரமான ஒரு காட்சி.. அவர் நடை என்ன உடை என்ன? என புகழும் அளவுக்கு மாற்றம் என சொல்லிக்கொண்டே போகலாம். மிக உயரிய பதவியில் இருக்கக்கூடிய தமிழிசை அவர்களை தமிழக பாஜக தலைவராக இருந்தபோது எத்தனையோ மீம்ஸ் உருவாக்கி பல்வேறு விமர்சனங்களும் எழுந்தது. அதையெல்லாம் மிகவும் ஈஸியாக கடந்து சென்று வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் தமிழிசை இன்று அவர் போகும் இடமெல்லாம் சிகப்பு கம்பளம் வீசி வரவேற்கப்படுகிறது.

அப்படி பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்த்தால்... தமிழிசை நாளுக்குநாள் அவருடைய மனதை போன்றே அழகிலும் மெருகேறி வருகிறார் என்ற எண்ணம்  அனைவர் மத்தியிலும் ஏற்படும் என்றால் அதில் சந்தேகமே இல்லை..

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Holiday Depression : விடுமுறையா இருந்தாலும் மன அழுத்தமா? இதை மட்டும் செய்ங்க; நிச்சய பலன் உண்டு
Uric Acid : யூரிக் அமில பிரச்சினை இருந்தா இந்த '4' பருப்பு வகைகளை சாப்பிடாதீங்க! நிலைமை மோசமாகிடும்