பெரும் விபத்தில் அடிப்பட்டும் ரத்தம் சொட்ட சொட்ட குட்டிக்கு பால் கொடுக்கும் குரங்கு... தாய்மார்களுக்கு பாடம் புகட்டும் விலங்கு..!

Published : Jan 06, 2020, 05:03 PM ISTUpdated : Jan 06, 2020, 05:12 PM IST
பெரும் விபத்தில் அடிப்பட்டும் ரத்தம் சொட்ட சொட்ட குட்டிக்கு பால் கொடுக்கும் குரங்கு... தாய்மார்களுக்கு பாடம் புகட்டும் விலங்கு..!

சுருக்கம்

குழந்தையை பெற்றெடுப்பதற்காக பிரசவத்தில் உச்சபட்ச வலியை பொறுத்துக்கொள்வள் தாய். அப்படி பெற்ற குழந்தையை தனது ரத்தத்தையை பாலாக்கி தருபவள் அவள். இங்கு கொட்டும் ரத்தத்தின் இடையே வலியையும் பொருட்படுத்தாமல் ரத்தம் சொட்ட சொட்ட தாய் குரங்கு குட்டிக்கு பால் கொடுத்த புகைப்படம் ஒன்று சமூவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

அன்பால் பெருக்கெடுப்பது காதல் மட்டுமல்ல, தாய்ப்பாலும் தான். இந்த உலகத்தில் கலப்படமில்லாத ஓர் உணவு தாய்ப்பால் என்பார்கள். ஆனால், தாய் கொடுப்பதால் தனது அழகு போய்விடுமோ என்ற அச்சத்தில் பெரும்பாலான தாய்மார்கள் தாய்பால் கொடுப்பதை தவிர்த்து வருகின்றனர். இந்நிலையில், தெலங்கானா மாநிலம், நர்சாபூரிலிருந்து ஐதராபாத் செல்லும் நெடுஞ்சாலையில் கும்முடிதல கிராமம் அருகே காடுகள் நிறைந்த பகுதி உள்ளது. இதனால் காட்டு பகுதியிலிருந்து வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி கிராம பகுதிகளுக்கு வருவது வழக்கம். அதேபோல் உணவை தேடி குரங்கு ஒன்று சாலையை கடந்தது.

அப்போது நரசாப்பூர் நோக்கி சென்ற வாகனம் குரங்கு மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த குரங்கிற்கு ரத்தம் வழிந்தது. ஆனாலும்,  குழந்தையின் பசியைப் போக்க ரத்த காயங்களையும் பொருட்படுத்தாமல் ரத்தம் சொட்ட சொட்ட தனது குட்டி குரங்குக்கு பால் கொடுத்தது. இந்த காட்சி அவ்வழியே வாகனங்களில் செல்பவர்களை நெகிழ செய்ததுடன் கண் கலங்க செய்தது. இந்த புகைப்படம் பலராறும் பகிரப்பட்டு வருகிறது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்