பொங்கலுக்கு தொடர் விடுமுறை..! மக்கள் குஷாயோ குஷி..!

By ezhil mozhiFirst Published Jan 6, 2020, 4:20 PM IST
Highlights

ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகை - செவ்வாய்க்கிழமை, வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி புதன்கிழமை- பொங்கல் பண்டிகை, ஜனவரி 16ஆம் தேதி வியாழக்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை உழவர் திருநாள் மற்றும் காணும் பொங்கல் என... தொடர்ச்சியாக வேலை நாட்களிலேயே பொங்கல் திருநாள் வருகிறது. 

பொங்கலுக்கு தொடர் விடுமுறை..!  மக்கள் குஷாயோ குஷி..!

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் அடுத்த வாரம் வர உள்ளதால் இப்போதே கொண்டாட தயாராகி விட்டனர் மக்கள்.

அதிலும் குறிப்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சென்னையில் வசித்து வேலை செய்து குடும்பம் நடத்தும் மக்கள் பொங்கல் திருவிழாவிற்கு அவரவர் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் திருவிழாவிற்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்ற ஏக்கம் இப்போது கிளம்பி உள்ளது.

அதற்கு ஏற்றார்போல் ஜனவரி 14ஆம் தேதி போகி பண்டிகை - செவ்வாய்க்கிழமை, வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி புதன்கிழமை- பொங்கல் பண்டிகை, ஜனவரி 16ஆம் தேதி வியாழக்கிழமை மாட்டுப்பொங்கல், ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை உழவர் திருநாள் மற்றும் காணும் பொங்கல் என... தொடர்ச்சியாக வேலை நாட்களிலேயே பொங்கல் திருநாள் வருகிறது. கூடுதலாக சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் விடுமுறை என்பதால் தொடர்ந்து ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

இதன் காரணமாக மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். குறிப்பாக மாணவர்கள் அதாவது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜனவரி 6 ஆம் தேதியான இன்று அரையாண்டு தேர்வு விடுமுறைக்குப் பின் திறக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த ஒரு வாரத்திலேயே பொங்கல் பண்டிகை வர இருப்பதால் அதிலும் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் விடுமுறை மற்றும் இரண்டு நாட்கள் கூடுதலாக விடுமுறை நாட்கள் என்பதால் ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.

இதன் காரணமாக மாணவர்கள் அவர்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க பொதுமக்களும் சொந்த ஊருக்கு சென்று வருவதற்கு ஏதுவாக 6 நாட்கள் விடுமுறை இருப்பதால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!