தமிழக்கத்தில் கொரொனா ஆய்வு மையங்கள் எங்கெல்லாம் இருக்கிறது தெரிந்து கொள்ளுங்கள்.!!

Published : Mar 16, 2020, 11:36 PM IST
தமிழக்கத்தில் கொரொனா ஆய்வு மையங்கள் எங்கெல்லாம் இருக்கிறது தெரிந்து கொள்ளுங்கள்.!!

சுருக்கம்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வரும் மார்ச் 31ம் தேதி வரை அரசு விடுமுறை அளித்துள்ளது. மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

T.Balamurukan

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் புதிதாக கொரோனா வைரஸ் ஆய்வகம் அமைக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.கொரொனா தாக்குதல் தமிழகத்தில் தாண்டவத்தை காட்ட ஆரம்பித்திருக்கிறது.

சீனாவின் வுகான் மாகாணத்தில் போட்ட பிள்ளையார் சுழி பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகளவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமாகியுள்ளனர். 4,368 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 57,463 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 
இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் கொரோனா தன்னுடைய ஆட்டத்தை தொடங்கியது. அதன்பிறகு தொடர்ச்சியாக பல மாநிலங்களில் உருவெடுத்து தமிழகத்திலும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவசர அவசரமாக எடுத்து வருகிறது. 

 தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் வரும் மார்ச் 31ம் தேதி வரை அரசு விடுமுறை அளித்துள்ளது. மேலும் அனைத்து டாஸ்மாக் கடைகளும் 31ம் தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க 52 இடங்களில் கொரோனா ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை கிண்டியில் உள்ள கிங் மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும், தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் கொரோனா ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக மதுரை, கோவை மற்றும் நெல்லையில் உள்ள அரசு மருத்துவனைகளில் ஆய்வகங்களா அமைக்கும் பணிகள் நடந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்