மதுரை வரலாற்று சிறப்பு மிக்க தமுக்கம் மைதானம் கண்ணீரோடு விடை பெற்றது.!! வரலாற்று அழிப்பில் அதிமுக...!!

By Thiraviaraj RMFirst Published Mar 16, 2020, 10:32 PM IST
Highlights

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் நூற்றாண்டு சிறப்புமிக்க, பாரம்பரிய தமுக்கம் மைதானம் நவீன கூட்ட அரங்காக மாற்றப்பட உள்ளது.மதுரையின் அடையாளங்களில் மிக முக்கியமானது தமுக்கம் மைதானம். இன்றைய மதுரை காந்தி மியூசியம் தான் கிபி 1670-ல் ராணி மங்கம்மாள் அரண்மனை. அரண்மனையிலிருந்து யானை சண்டை, குதிரை சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுகளைக் கண்டு ரசிப்பதற்காக அரண்மனை அருகே தமுக்கம் மைதானம் உருவாக்கப்பட்டது.

T.Balamurukan

பல நூற்றாண்டை கடந்த மதுரை தமுக்கம் மைதானம் கண்ணீரோடு மதுரை மக்களை விட்டு பிரிந்து சென்றது. மக்கள் அனைவரும் கூட்டமாக வேடிக்கை பார்த்தும் செல்பி எடுத்தும் வரலாற்றை தங்கள் செல்போன்களில் பதிவு செய்து கடந்து செல்கின்றார்கள்.மக்களின் உணர்வுகளையும்,வரலாற்றையும் புரிந்துகொள்ளாத அரசாங்கத்தை என்ன செய்வது என்று புலம்பிய படியே மக்கள் நகர்வதை மட்டும் பார்க்கமுடிந்தது.

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் நூற்றாண்டு சிறப்புமிக்க, பாரம்பரிய தமுக்கம் மைதானம் நவீன கூட்ட அரங்காக மாற்றப்பட உள்ளது.மதுரையின் அடையாளங்களில் மிக முக்கியமானது தமுக்கம் மைதானம். இன்றைய மதுரை காந்தி மியூசியம் தான் கிபி 1670-ல் ராணி மங்கம்மாள் அரண்மனை. அரண்மனையிலிருந்து யானை சண்டை, குதிரை சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுகளைக் கண்டு ரசிப்பதற்காக அரண்மனை அருகே தமுக்கம் மைதானம் உருவாக்கப்பட்டது.

1959-ம் ஆண்டு முதல் ராணி மங்கம்மாள் அரண்மனை காந்தி அருட்காட்சியமாக மாற்றப்பட்டதாலும் துவக்கத்திலிருந்து தமுக்கம் மைதானம் அதே பெயருடன் மாநகாட்சியின் கட்டுப்பாட்டில் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. சித்திரைப் பொருள் காட்சி, புத்தகக் கண்காட்சி என ஆண்டுதோறும் லட்சணக்கான மக்கள் கூடும் முக்கிய நிகழ்வுகள் அங்குதான் நடைபெறும்.

1981-ல் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் முயற்சியில் ஐந்தாம் உலக தமிழ் மாநாடு நடத்தப்பட்டதும் இதே தமுக்கம் மைதானத்தில்தான். இவ்வளவு ஏன் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பல்லாயிரக்கணக்கானோர் கூடி வர அடையாளமாக இருந்ததும் இதே தமுக்கம்தான். இத்தனை சிறப்புகளைக் கொண்ட தமுக்கம் மைதானம், இன்றோடு  மதுரையிலிருந்து விடைபெறுகிறது.

9.68 ஏக்கர் பரப்பளவு கொண்ட மைதானத்தில் ஏற்கனவே ஒரு கலையரங்கம் உள்ளது. எஞ்சியுள்ள 4.08 ஏக்கரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீன கூட்ட அரங்கு அமைக்க முடிவு செய்துள்ள மதுரை மாநகராட்சி, அதற்கான பணிகளை வரும் திங்களன்று துவங்க உள்ளது. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு 45.6 கோடி மதிப்பில்பணிகளை துவக்க உள்ளது.3,500 இருக்கைகளுடன், 4,300 சதுர மீட்டர் பரப்பில் 7 கூட்ட அரங்குகள், 1,178 சதுர மீட்டரில் உணவுக்கூடம், 215 டூவிலர்கள், 240 கார்கள் நிறுத்தும்படியான நவீன வாகன நிறுத்தம் என வரைபடம் தயாராகி மீனாட்சி அம்மன் கோவில் வடிவில் அதனை வடிவமைக்க மாநகராட்சி மும்முரம் காட்டி வருகிறது. மார்ச் 15-ம் தேதி நிறைவடையும் முதல்வர் கோப்பை கபடி போட்டிதான் தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் இறுதி நிகழ்வாகும்.

அதன்பின், மைதானம் கட்டடமாக மாறி பெரு நிறுவனங்களின் பயன்பாட்டிற்கு செல்ல உள்ளது. இந்த ஏற்பாடு காரணமாக மதுரை மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற சித்திரை கண்காட்சி, கட்டுமானத்தை காரணம் காட்டி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மதுரையின் அடையாளமாக , பண்டைய மரபுகளின் பொக்கிஷமாக இருந்த பகுதியை ஆண்டுக்கு 6.48 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்பதற்காக வணிகப் பயன்பாட்டிற்கு மாற்றியிருக்கும் மாநகராட்சியின் செயல் மதுரைவாசிகளுக்கு வருத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது.கட்டுமானப் பணிகளுக்கு எத்தனையோ இடங்கள் இருந்தும், நூற்றாண்டுகளை கடந்த தமுக்கம் மைதானத்தை மாநகராட்சி தேர்வு செய்திருப்பது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு சட்டமன்றத்தொகுதிக்குள் இருக்கும் தமுக்கம் மைதானத்தை மாற்றி அமைக்க கூடாது என்றும் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்று கூட மதுரை எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் அரசுக்கு கோரிக்கை வைக்க முன்வரவில்லை. இந்நிலையில் மதுரை மத்திய தொகுதி எம் எல் ஏ ,பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவை தலைவருக்கு சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தமுக்கம் மைதானம் இடிக்க கூடாது.அது பழைய நிலையே நீடிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருக்கிறார்.

மதுரை உயர்நீதிமன்றம் வழக்கறிஞரும்,சமூக ஆர்வலருமான எட்டிமங்கலம் ஸ்டாலின் பேசும் போது.., " மதுரையில் ஸ்மார்ட் சிட்டி என்கிற பெயரில் மதுரையின் வரலாறு அழிக்கப்பட்டு வருகிறது. மதுரை சங்ககால வரலாற்று பொக்கிசம். மதுரைக்கு வளர்ச்சி திட்டங்கள் தேவைதான். அதற்காக வரலாற்றை அழித்துதான் திட்டங்களை செயல்படுத்துவோம் என்கிற ஆளும் கட்சியும்,அதிகாரிகளும் இருப்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கலாம்.ஆனால் நீதிமன்றம் பார்த்துக்கொண்டிருக்காது. இந்த திட்டத்தி ல் முறைகேடுகள் நடைபெற நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கிறேன் என்றார். 

click me!