
பெண் செய்தியாளர் பலி..! விசாரணையில் வெளிவந்த “ஓவர் டைம்” வேலை..!
வேலை பளு காரணமாக பலருக்கும் ரத்த அழுத்தம், மன அழுத்தம், எப்பொழுதும் டென்ஷன் என இருப்பது இயல்பாகவே மாறிவிட்டது.
அதிலும் ஓவர்டைம் வேலை செய்து வந்தால்,வேலையை தவிர வேறு எதிலும் மனம் நினைக்க வில்லை என்றால் கண்டிப்பாக உங்களுக்கு சில பிரச்னை வரத்தான் செய்யும்...
உதாரணம்:
ஜப்பானில் உள்ள என்.ஹெச்.கே. தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராக பணி புரிந்த மிவா சாடோ என்ற 31 வயது பெண்,அதிக நேரம் வேலை பார்த்ததால்,இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளார் என்ற அதிர்ச்சி வெளியாகி உள்ளது
இவர் இறந்தது என்னமோ கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி என்பது குறிபிடத்தக்கது
விசாரணை
இவர் உயிர் இழந்த சமயத்தில், ஒரு உள்ளூர் மற்றும் தேசிய தேர்தல் குறித்த செய்திகளை அளித்துள்ளார் என்றும், ஒரு மாதத்தில் மட்டும் கூடுதலாக 159 மணிநேரம் ஓவர் டைம் பார்த்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது
மேலும், வேலைப்பளுவை சமாளிக்க முடியவில்லை என தன் தந்தைக்கு ஒரு மெயில் கூட அனுப்பி உள்ளாராம்.
இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த உடனே, ஜப்பான் அரசு பல அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.