ஒரே மேடையில் நடந்த தந்தை மகன் திருமணம்!ஜார்க்கண்ட்டில் நடந்த விசித்திரம்.!

By Thiraviaraj RMFirst Published Feb 24, 2020, 8:19 PM IST
Highlights

'குழந்தை குட்டி பெத்துக்ட்டு கல்யாணம் தான் பண்ணிக்கலாமா'!? என்கிற சினிமா பாடல் நிஜமாகியிருக்கிறது. 30ஆண்டுகள் கழித்து தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் நடந்த திருமணம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

T.Balamurukan
 'குழந்தை குட்டி பெத்துக்ட்டு கல்யாணம் தான் பண்ணிக்கலாமா'!? என்கிற சினிமா பாடல் நிஜமாகியிருக்கிறது. 30ஆண்டுகள் கழித்து தந்தைக்கும், மகனுக்கும் ஒரே மேடையில் நடந்த திருமணம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

 


ஜார்கண்ட் மாநிலம, குல்மா மாவட்டத்தில் கக்ரா என்ற பகுதியில் பழங்குடி இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் திருமணமாகாமல் ஒன்றாக இணைந்து தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.இந்த கிராமத்தை சேர்ந்த ராம்லால்-ஷாக்கோரி தம்பதி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தி வருகின்றனர்.இது நமக்கு புதிதாக இருந்தாலும் அந்த மக்களுக்கு திருமணம் ஆகாமல் குடும்ப வாழ்க்கை நடத்தி வருவது சகஜம் தான். 

இவர்களுக்கு ஜித்தீஷ் என்ற மகன் இருக்கிறார். மகன் ஜித்தீசும் திருமணம் செய்யாமலே அருணா என்ற பெண்ணுடன் ஒன்றாக வாழ்ந்து வந்திருக்கிறார்.. இவர்களுக்கு ஒரு கை குழந்தையும் இருக்கிறது.இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலானோர் திருமணம் செய்யாமல் இருப்பதால் தொண்டு நிறுவனம் ஒன்று தங்களுடைய சொந்த செலவில் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தது.அதன்படி தந்தை, மகன் இருவருக்கும் ஒரே மேடையில், ஒரே நாளில் திருமணம் செய்து வைத்திருக்கிறது அந்த தொண்டு நிறுவனம்.
30 ஆண்டு காலம் திருமணம் ஆகாமல் தன் பேரக்குழந்தையின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார் ராம்லால் தாத்தா.இது ஒரு விசித்திரமான திருமணம்.

click me!