டெஸ்ட் போட்டிகளில் கவாஸ்வர் "10,000 ரன்களை" கடந்தது இங்கே தான்பா..! அதுமட்டுமா... உள்ளே பாருங்க..!

By ezhil mozhiFirst Published Feb 24, 2020, 5:55 PM IST
Highlights

3000 கார்கள், 10,000 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த மிக பெரிய பார்க்கிங் வசதி இங்கு கிரிக்கெட் மைதானம் மட்டுமின்றி கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, டென்னிஸ், ஓட்டப் போட்டி உள்ளிட்ட பல விளையாட்டு வசதிகளும் உள்ளன.

டெஸ்ட் போட்டிகளில் கவாஸ்வர் "10,000 ரன்களை" கடந்தது இங்கே தான்பா..! அதுமட்டுமா... உள்ளே பாருங்க..! 

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கட்டப்பட்ட  உலகத்தின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான மோடிரா (Motera)மைதானத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று திறந்து வைத்தார் 

இந்த மைதானத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன தெரியுமா..? 

1. இந்த மைதானத்தில் 1,10,000 பேர் அமர முடியும்.இதற்கு  முன்னதாக 95,000 பேர் அமரும் வசதி கொண்ட ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானம் தான் உலகின் மிக பெரிய மைதானமாக இருந்தது. 

2. கவாஸ்வர் டெஸ்ட் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்தது இந்த மைதானத்தில் தான். இதே போன்று கபில் தேவ் அதிக விக்கெட் எடுத்த  மைதானமும் இதுதான் 

3.75 குளிர்சாதன வசதி கொண்ட கார்ப்பரேட் பாக்ஸ், 55 அறைகள், உள் மற்றும் வெளி விளையாட்டு அரங்குகள், உணவகங்கள், ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளங்கள், ஜிம்னாஸ்டிக் கூடம், 3 டி புரோஜெக்டர் தியேட்டர்,உள்விளையாட்டு பயிற்சி கூடங்கள்,கிரிக்கெட் அகாடமி அறைகள், புட் கோர்ட், மருத்துவ வசதி பகுதி,எல்இடி விளக்குகள், மீடியா பாக்ஸ் கொண்டு உள்ளது. 

வாகனங்கள்:

3000 கார்கள், 10,000 இரு சக்கர வாகனங்கள் நிறுத்த மிக பெரிய பார்க்கிங் வசதி இங்கு கிரிக்கெட் மைதானம் மட்டுமின்றி கால்பந்து, ஹாக்கி, கூடைப்பந்து, கபடி, குத்துச்சண்டை, டென்னிஸ், ஓட்டப் போட்டி உள்ளிட்ட பல விளையாட்டு வசதிகளும் உள்ளன.

இதை எல்லாம் விட மிக சிறந்த விஷயமாக ஆமதாபாத் மெட்ரோவுடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே தனி வாகனத்தில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.   

click me!