
நாக்கில் புண் வருவது ஒரு பொதுவான பிரச்சினை. இதை புறக்கணித்தால் மிகவும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி விடும். நாக்கு புண்ணானது நாக்கின் நுனியில் இருக்கும், நாக்கில் சிவப்பு திட்டுகளாக இருக்கும், ஒரு பக்கம் அல்லது நாக்கு முழுவதும் சின்ன சின்ன புடைப்புகள் போன்று இருக்கும். இது எரிச்சல் மற்றும் வலி உணர்வை தரும். சில சமயங்களில் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.
நாக்கில் புண் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. இது நரம்பு தளர்ச்சி, வைட்டமின் குறைபாடு போன்ற காரணங்களால் ஏற்பட்டால் அதுகுறித்து கவலைப்பட வேண்டாம். இதுதவிர காயங்கள், வாய் புண்கள், வாய் வலி தொற்றுகள், அலர்ஜி, உணவுகள், சில மருந்துகளின் பக்க விளைவுகள், அமிலத்தன்மை அதிகமாக இருத்தல், புகையிலைப் பொருட்களின் பயன்பாடு ஆகியவற்றாலும் ஏற்படும். சில சமயங்களில் நாக்கில் இருக்கும் புண் ஒரு தீவிர நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். எனவே நீண்ட நாட்கள் நாக்கில் புண் இருந்தால் அதை புறக்கணிக்காமல் உடனே மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சையை பெற்றுக் கொள்ளுங்கள். சரி இப்போது இந்த பதிவில் நாக்கில் இருக்கும் புண்களை குணமாக்க உதவும் சில சிம்பிளான வீட்டு வைத்தியங்கள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.
நாக்கில் இருக்கும் புண்களை குணமாக்க வீட்டு வைத்தியங்கள் :
1. கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் இருக்கும் பண்புகள் நாக்கில் இருக்கும் புண்களை குணப்படுத்தவும், வலியை குறைக்கவும் உதவும். இதற்கு தினமும் கற்றாழை ஜெல்லை நாக்கில் இருக்கும் புண்கள் மீது தடவி வரவும்.
2. தேன்
தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் புண்களை விரைவாக ஆற்ற பெரிதும் உதவுகிறது. இதற்கு ஒரு பருத்தி துணியில் சிறிதளவு தேன் தடவி அதைக்கொண்டு நாக்கில் இருக்கும் புண்கள் மீது தடவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நாக்கில் இருக்கும் புண் விரைவில் குணமாகும்.
3. மஞ்சள்
மஞ்சளில் காயங்களை குணப்படுத்தும் பண்புகள் உள்ளன. இது நாக்கில் இருக்கும் புண்களை ஆற்றவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகிறது. இதற்கு சிறிதளவு மஞ்சள் பொடியுடன் நீர் கலந்து அதை பேஸ்ட் போலாக்கி, அந்த பேஸ்ட்டை நாக்கில் உள்ள புண்கள் மீது தடவி வந்தால் விரைவில் குணமாகும்.
4. உப்பு நீர்
உப்பு நீரில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாயில் இருக்கும் பாக்டீரியாக்களை கொல்லும். இதற்கு ஒரு கிளாஸ் சூடான நீரில் சிறிதளவு உப்பு கலந்து அதை கொண்டு வாயில் கொப்பளித்து வந்தால் உடனே நிவாரணம் கிடைக்கும்.
5. கெமோமில் டீ
கெமோமில் டீ உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நாக்கில் ஏற்படும் அலர்ஜியை குறைக்க உதவுகிறது. இதற்கு தினமும் குடித்து வந்தால் நாக்கில் இருக்கும் புண்கள் சரியாகிவிடும்.
6. தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் வாயில் இருக்கும் நுண்ணுயிர் கிருமிகளை அழிக்க உதவுகிறது. எனவே தினமும் தேங்காய் எண்ணெய் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் வாயில் இருக்கும் கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும். இல்லையெனில் ஒரு பருத்தி உருண்டையை தேங்காய் எண்ணெயில் நனைத்து அதை நாக்கில் இருக்கும் புண்கள் மீது தடவி வந்தால் வலியும், குறையும் விரைவில் குணமாகும்.
முக்கிய குறிப்பு :
- மேலே சொல்லப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே இதை பயன்படுத்துவதற்கு முன் முதலில் சிறிய அளவில் மட்டும் பயன்படுத்தி பாருங்கள்.
- நாக்கில் இருக்கும் புண்கள் நீண்ட நாட்கள் குணமாகாமல் அப்படியே இருந்தாலோ அல்லது மேலும் மோசமானால் உடனே மருத்துவரை அணுகி அதற்குரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ளுங்கள்.
நாக்கில் புண்கள் வருவதை தடுக்க வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்கவும் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.