அதிரடி ஆக்ஷனில் இறங்கிய "பேஸ்புக் நிறுவனம்"..! எந்தெந்த பதிவுகளை நீக்கப்போகிறது தெரியுமா..?

thenmozhi g   | Asianet News
Published : Apr 21, 2020, 04:41 PM IST
அதிரடி ஆக்ஷனில் இறங்கிய "பேஸ்புக் நிறுவனம்"..! எந்தெந்த  பதிவுகளை  நீக்கப்போகிறது தெரியுமா..?

சுருக்கம்

அரசுக்கு எதிராக ஊரடங்கு விதிகளை மீறும் வகையில், பேஸ்புக்கில் பதிவு செய்யப்படும்  நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை நீக்கும் பணியில் இறங்கி உள்ளது பேஸ்புக் நிறுவனம் 

அதிரடி ஆக்ஷனில் இறங்கிய "பேஸ்புக் நிறுவனம்"..! எந்தெந்த  பதிவுகளை  நீக்கப்போகிறது தெரியுமா..? 

உலக அளவில் 24.73 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர் 

இந்த ஒரு நிலையில் அரசுக்கு எதிராக ஊரடங்கு விதிகளை மீறும் வகையில், பேஸ்புக்கில் பதிவு செய்யப்படும்  நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை நீக்கும் பணியில் இறங்கி உள்ளது பேஸ்புக் நிறுவனம் 

அதன் படி பங்குகொள்ள ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்காமல் மற்றவர்களுக்கும் அழைப்பு விடுத்து, பல்வேறு  நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைப்பு கொடுத்து வருகின்றனர் சிலர். இதற்கு நாங்கள் அனுமதி அளிக்க முடியாது. மேலும், கொரோனா வைரஸ் குறித்த போலியான தகவல்களை பரப்பினால் அதனையும் நீக்கி வருகிறோம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்து உள்ளது 

இதற்கு முன்னதாக, அமெரிக்காவில் ஊரடங்கு விதிகளுக்கு எதிராக தொழிலாளர்கள் திரண்டு போராட்டங்களை நடத்த, சமூக வலைதளங்கள் மூலமே அழைப்பு விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. எனவே மற்ற உலக  நாடுகளில் இது போன்ற நிகழ்வு நடைபெறாமல் இருக்க பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை  எடுத்து வருகிறது .

மேலும் அந்தந்த நாடுகளில், அரசு விதிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு எதிராக வன்முறை தூண்டும் வகையிலும் மக்களை குழப்பும் வகையிலும் செய்திகள் வெளியானால் அதனையும் நீக்குகிறது பேஸ்புக் நிறுவனம் 

பேஸ்புக் மூலம் அழைப்பு விடுத்து கூட்டம் கூட்டி அதன் மூலம் கொரோனா பரவ  வாய்ப்பு உள்ளது என்பதாலும், ஊரடங்கு உத்தரவை மீற கூடாது என்பதற்காகவும் பேஸ்புக்  நிறுவனம் இப்படி ஒரு அதிரடி உத்தரவை எடுத்து உள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Holiday Depression : விடுமுறையா இருந்தாலும் மன அழுத்தமா? இதை மட்டும் செய்ங்க; நிச்சய பலன் உண்டு
Uric Acid : யூரிக் அமில பிரச்சினை இருந்தா இந்த '4' பருப்பு வகைகளை சாப்பிடாதீங்க! நிலைமை மோசமாகிடும்