Eye care tips: கண்ணை சுற்றி கருவளையமா? முகத்தை வெளியே காட்ட சங்கடமா..? ஐந்து எளிய டிப்ஸ்…!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 17, 2022, 09:48 AM ISTUpdated : Feb 17, 2022, 05:36 PM IST
Eye care tips: கண்ணை சுற்றி கருவளையமா? முகத்தை வெளியே காட்ட சங்கடமா..? ஐந்து எளிய டிப்ஸ்…!!

சுருக்கம்

பொலிவிழந்த கண்களின் கீழ்பகுதியை அழகாக வைத்துக்கொள்ள செய்ய வேண்டிய எளிய ஐந்து டிப்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.   

கண்களை சுற்றிய கருவளையம் இன்றைய பெண்கள் அதிகமாக, சந்திக்கும் பிரச்சனை ஆகும்.  இவை வருவதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பினும், பெரும்பாலும் தூக்கமின்மை, அதிக வேலை பளு, மன அழுத்தம் போன்றவற்றால் கருவளையம் தோன்றும்.  இந்த கருவளையம் வந்துவிட்டால், முகம் வயதான தோற்றம் போல, பொலிவிழந்து காணப்படும். முன்பு 40 வயதை கடந்த பெண்களுக்கு தான் இவை அதிகமாக இருந்தது. தற்போது இளம்பெண்களுக்கு  இந்த பிரச்சனை அதிகரித்து வருகிறது. ஏன், பெரும்பாலான ஆண்களும் கண்களுக்கு கீழ் வரும் கருவளையம் பிரச்சனை ஏற்படுகிறது. இவற்றை, சரி செய்வதற்கு என்னென்ன குறிப்புகள் இருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்வோம். 

குளிர் அழுத்தம் தருதல்:

கண்களின் கீழ்பகுதியை ஐஸ்கட்டிகளால் குளிர்வித்தல் மிகவும் சிறந்த நன்மைகளை வழங்கக்கூடியது. இது விரிந்த இரத்த நாளங்களைச் சுருக்க உதவுகிறது. ஐஸ் கட்டிகளை துணிக்குள் சுற்றி சுமார் 20 நிமிடங்கள் கண்களுக்கு கீழ் பயன்படுத்தலாம். குளிர்ந்த நீரில் நனைத்த துணியையும் பயன்படுத்தலாம். 20 நிமிடங்களுக்கு இடையில் துணியில் குளிர் குறைந்தாலோ, ஐஸ்கட்டி உருகினாலோ மீண்டும் பயன்படுத்தலாம்.

விளக்கெண்ணெய்:

 நமது முன்னோர்கள் நல்லெண்ணெய் போன்று விளக்கெண்ணையையும் கண்களுக்குள் சில சொட்டு விட்டு கண்ணில் இருக்கும் அழுக்கை எடுக்க பயன்படுத்துவார்கள். விளக்கெண்ணெயுடன் இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளுங்கள். பிறகு ஒரு டீஸ்பூன் காபி தூளை சேர்த்து நன்றாக க்ரீம்பதத்துக்கு கலக்குங்கள். எண்ணெயுடன் கற்றழை ஜெல் காபித்தூள் இரண்டுமே கலக்காது என்றாலும் அகன்ற பாத்திரத்தில் சுடு தண்ணீரை கொதிக்க வைத்து அந்த நீருக்குள் இந்த பெளலை வைத்து கலக்கி கொண்டே இருந்தால் க்ரீம் பதத்துக்கு தயாராகும். இதை காற்றுபுகாத டப்பாவில் வைத்து தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு கண்களுக்கு கீழ் தடவி கொள்ளுங்கள். இவை சருமத்தை நன்றாக இறுக்கி பிடிக்கும். இரண்டு வாரங்களில் வித்தியாசம் தெரியும்.

 சருமம் பளபளக்கும் கிரீம்களைப் பயன்படுத்துதல்:

கண்களுக்குக் கீழே உள்ள தோல் மெல்லியதாக இருப்பதால், அதற்கு மென்மையான சிகிச்சை தேவைப்படுகிறது. வைட்டமின் சி, ரெட்டினாய்டுகள் மற்றும் ஹைலூரோனிக் அமிலம் நிறைந்த கிரீம்கள் கண்ணுக்குக் கீழே உள்ள கருமையைக் குறைப்பதில் நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

பிளாக் டீ அல்லது கிரீன் டீ:

இரண்டு பிளாக் டீ அல்லது கிரீன் டீ பைகளை ஐந்து நிமிடம் வெந்நீரில் ஊற வைக்கவும். பின்னர் 15 முதல் 20 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். தேநீர் பைகள் போதுமான அளவு குளிர்ந்தவுடன், அவற்றை உங்கள் மூடிய கண்களில் 10 முதல் 20 நிமிடங்கள் வரை வைக்கவும். அதன் பிறகு, உங்கள் கண்களை குளிர்ந்த நீரில் நன்றாக கழுவ வேண்டும். அதன்பிறகு 10 நிமிடங்களுக்கு கண்களை மூடி வைக்கவும், அப்போது தான் அதன் பலன் நீண்ட நாட்கள் நீடிக்கும்.

வேலை பளு குறைத்து கொள்ளுதல்:

நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து, வேலை பார்ப்பது. அதிக நேரம் கணினி பயன்பாடு கண்ணில் கருவளையம் தோன்ற வழிவகை செய்கின்றன. எனவே, அதிகப்படியான வேலை பளு குறைத்து கொள்வது அவசியம். 

மன அழுத்தம் இல்லாமல் நல்ல உறக்கம் அவசியம்:

கரு வளையங்கள் நீங்க சிகிச்சைகள் பயன்படுத்தப்படலாம் ஆனால் ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள்தான் நீண்ட நாட்கள் பலன் அளிக்கின்றன. ருவருக்கு, 6 அல்லது 7 மணி நேரம் தூக்கம் தேவை.  ஆரோக்கியமான உணவு மற்றும் சரியான அளவு தூக்கம் கண்களுக்கு மிகவும் முக்கியம்.


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Bananas For Constipation : மோசமான மலச்சிக்கல் கூட இந்த 1 பொருளை 'வாழைப்பழத்துடன்' சேர்த்து சாப்பிட்டால் தீரும்!!
Foods for Hair Loss : இந்த '5' உணவுகள் முடி கொட்டுறத அதிகரிக்கும் இனிமேல் குறைச்சுக்கோங்க