
உலகில் முதல் முறையாக 64 வயதான கிராவிடாஸ் என்ற அமெரிக்க பெண்மணி எய்ட்ஸ் நோயிலிருந்து குணமடைந்து உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.கடந்த 2013 ஆம் ஆண்டு 64 வயதான கிராவிடாஸ் என்ற அமெரிக்க பெண்மணி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, கடந்த 2017 -ஆம் ஆண்டு அவருக்கு ரத்த புற்றுநோயும் ஏற்பட்டது.
எனவே, ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முடிவு செய்தார். இது, மிகவும் ஆபத்தான சிகிக்சை என்று மருத்துவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், துணிச்சலான மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.
ஸ்டெம் செல் சிகிக்சையை மருத்துவர்கள் எப்படி கையாண்டார்கள்? சிகிக்சை எப்படி?
ரத்தம் புற்றுநோயை அளிக்க தொப்புள் கொடி இரத்தம், ஸ்டெம் செல்லை எடுத்து பொருத்துவதற்கு எலும்பு மஜ்ஜையில் இரத்தத்தை உருவாக்கும் உயிரணுக்கள் தேவைப்பட்டது. இதையடுத்து, HIV தாக்காத மனிதர்களிடம் இருந்து ரத்தம் எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, ரத்தத்தில் HIV தாக்காத 1 சதவீகிதம் மக்களில், வட ஐரோபியர்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து, அவர்களில் தருவதற்கு முன்வந்த ஒருவரிடம் இருந்து, HIV -யை அளிக்கும் ஸ்டெம் செல் மற்றும் தொப்புள் கொடி இரத்தம் பெற்றனர்.
இதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு அறுவை சிகிக்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, தற்போது அந்த அமெரிக்க பெண்மணிக்கு ரத்தத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, அந்த ரத்தத்தில் HIV தாக்காதது கண்டறியப்பட்டது. இந்த செய்தி மருத்துவர்களை வியப்பில் ஆழ்த்தியது. இது மாபெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.மேலும், அந்த பெண்மணி கடந்த நான்கு ஆண்டுகளாக மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத்தில், இதற்கு முன்பாக இரண்டு ஆண்கள் HIV தாக்கத்தில் இருந்து குணமடைந்துள்ளனர். இருப்பினும், பெண் என்று பார்க்கும் போது, HIVயை வென்ற முதல் பெண் என்ற வகையில் உலக மக்களால் பார்க்கப்படுகிறார். இந்த பெண், குணமடைந்தது, HIV நோயாளிகளுக்கு மிக பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. நோயொலிருந்து மீண்டு வாழ்வதற்கு ஒரு வழியை ஏற்படுத்தி தந்துள்ளது. இனி வரும் காலங்களில் இதன் பயன்பாடு அதிகரித்து HIV நோயாளிகள் குணமடைவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.