Morning routine: சோம்பலா இருக்கா? இனிய காலையை உற்சாகத்துடன் துவங்க...6 ஈஸியான வழிமுறைகள்..!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 17, 2022, 08:01 AM ISTUpdated : Feb 17, 2022, 05:37 PM IST
Morning routine: சோம்பலா இருக்கா? இனிய காலையை உற்சாகத்துடன் துவங்க...6 ஈஸியான வழிமுறைகள்..!!

சுருக்கம்

காலை எழுந்தவுடனே, அந்த நாள் முழுவதும் உற்சாகமாக கடந்து செல்ல, நாம் செய்ய வேண்டிய சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

காலை எழுந்தவுடனே, அந்த நாள் முழுவதும் உற்சாகமாக கடந்து செல்ல, நாம் செய்ய வேண்டிய சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

'பிஸியான' வாழ்க்கைச் சூழலில் எதிர்காலத்தையும், கடந்த காலத்தையும் நினைத்துக்கொண்டே கடத்தும் நொடிகளின் தொகுப்பே நம்முடைய வாழ்வு. அந்த நொடியில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் ஏராளம். எனவே, இந்த தொடர்ச்சியான மன அழுத்தமானது, நமது மூளையளவில் பெரிய மாறுதல்களை உண்டாக்குகின்றன. அதனால் நாம் பல சுவாரஸ்யமான தகவல்களை கூட எந்த உணர்வுமின்றி அணுகுவது இயல்பாகிவிட்டது.

ஓமைகிறான் கரோனா உள்ளிட்ட தவிர்க்க முடியாத சில நிகழ்வுகள், இந்த 2022இல் நம் அனைவருக்கும் மிகவும் ஆபத்தான கோபம், பயம், பதட்டம், விரக்தி, பீதி, போன்ற மனநலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்று கணித்துள்ளது. இது போன்ற சூழ்நிலைகளில் நாம் ஒவ்வொரு நாளையும் மகிழ்ச்சியாக கடந்து செல்வது அவசியம்.

திட்டமிடல் அவசியம் :

இரவு எத்தனை மணிக்கு, தூங்கி காலையில் எத்தனை மணிக்கு விழிப்பது போன்ற நிலையான திட்டமிடம் வேண்டும். ஒருவருக்கு, 6 அல்லது 7 மணி நேரம் தூக்கம் போதுமானதாகும். அதேபோன்று, அதிகாலை 5 மணிக்கு விழித்து கொள்வது நல்லது. திட்டமிடல் என்பது உங்கள்  காலையை டென்ஷன் ஃபிரீயாக மாற்றும். காலை உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் எவ்வளவு நேரம் தேவைப்படும், எவ்வளவு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்பது குறித்து சரியாக திட்டமிடுங்கள் . 
 
படுக்கையில் எழுந்தவுடன் மொபைல் போன் தொட வேண்டாம்:

காலை எழுந்தவுடனே மொபைலை ஸ்க்ரால் செய்வது நம்மில் பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. ஆனால், அவ்வாறு செய்யாமல் உடனடியாக படுக்கையில் இருந்து எழுந்துருக்க வேண்டும். அதன் பிறகு காலை கடமைகளான பிராத்தனை , பல் துலக்குதல், உடற்பயிற்சி, யோகா போன்றவற்றில் ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும்.

உணவு:

காலை உணவை எந்த காரணம் கொண்டும் தவிர்க்காதீர்கள், நேரத்திற்கு சாப்பிடுவது உங்களது இம்யூனிட்டி பவரை அதிகப்படுத்தும் வொர்க்அவுட் செய்வதற்கு முன் ஏதாவது சாப்பிடுவது உங்கள் உடலுக்கு  எனர்ஜி அளிக்குமாம். ஒரு சிறிய ஆப்பிள் அல்லது அரை வாழைப்பழத்தை ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக சாப்பிட்டுவிட்டு உடற்பயிற்சியை தொடங்குங்கள்.


உறங்குவதற்கு முன்னதான மொபைல்ஃபோனை தவிர்க்கவும் :

உறங்குவதற்கு முன்னதாக படுக்கையில் சில மணி நேரம் மொபைலை பயன்படுத்துபவராக நீங்கள் இருந்தால் , உடனடியாக அதை தவிர்த்து விடுங்கள். இது உங்களது உறக்கத்தை மட்டுமல்லாம அடுத்த நாளுக்கு தேவையான செயல் திறனையும் குறைத்து விடுகிறது.

தண்ணீருடன் தொடங்குங்கள் :

காலை, எழுந்தவுடன் சிலருக்கு பெட் காபி, டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். அவற்றை தவிர்த்து காலை எழுந்தவுடன் நம் அனைவரும் ஒரு பாட்டில் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீருடன் தொடங்குவது உடலுக்கு கூடுதல் எனர்ஜியை கொடுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். தண்ணீர் இன்றியமையாதது, ஏனென்றால் நீங்கள் உண்ணும் உணவை உங்கள் உடல் ஜீரணிக்க உதவுகிறது, அதிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி, கழிவுப்பொருட்களை அகற்ற உதவுகிறது.

வொர்க்அவுட்:

காலை எழுந்ததும் வொர்க்அவுட் செய்வது உங்களது உடலுக்கு மட்டுமல்லாமல் , மனதிற்கு நன்மை 
பயக்கும். வொர்க்அவுட் செய்வது உங்களின் தூக்கம், விழிப்பு  இரண்டின் சுழற்சியை சீராக்க உதவும், அதுவே வழக்கமாக  இருந்தால் எடை குறைக்கவும் உதவும். முழு வொர்க்அவுட்டிற்கும் உங்களுக்கு நேரம் இல்லையென்றால், உங்கள் தசைகள் மற்றும் மூட்டுகளை அடுத்த நாளுக்கு தயார் படுத்த சில ஸ்ட்ரெச்சர்ஸ் வொர்க் அவுட்டை செய்யலாம்


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்