மேஷம், மகரம் ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும், மகிழ்ச்சி பொங்கும்...12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்..!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 17, 2022, 06:28 AM ISTUpdated : Feb 17, 2022, 10:55 AM IST
மேஷம், மகரம் ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும், மகிழ்ச்சி பொங்கும்...12 ராசிகளுக்கான இன்றைய  பலன்கள்..!!

சுருக்கம்

ஜோதிட சாஸ்திரத்தில், ஒருவரின் எதிர்காலத்தை கணிக்க ஜாதகங்கள் முக்கியமாக பயனுள்ளதாக இருக்கும்.அதன்படி,12 ராசிகளுக்காக இன்றைய ராசி பலன்கள். 

ஜாதகம் என்பது மக்களின் நம்பிக்கையை பொறுத்து அமைந்து உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தில் ஜாதகத்தைத் தவிர, ராசிகளும் ஒரு நபரின் ஆளுமை, இயல்பு, நிகழ்காலம், எதிர்காலம் மற்றும் அதிர்ஷ்டத்தையும் கணிக்க உதவுகின்றன. சில சமயங்களில் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய நீங்கள் தேர்வு செய்யக்கூடிய விஷயங்கள், ராசி பலன்களை வைத்து கணிக்கப்படுகிறது.

மேஷம்:

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கை கூடி வரும். இன்று திருமண முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வராத கடன்கள் வசூலாகும். வேலைபளு காரணமாக உடல் அசதி சோர்வு உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். 

ரிஷபம்: 

சந்திரன் உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். குடும்பத்தில் சின்னச் சின்ன சண்டைகள் வரலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம்:

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான குடும்ப வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சொந்த தொழில் புரிபவர்களுக்கு வெளியூர் வெளிநாட்டு தொடர்பு கிட்டும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.

கடகம்: 

சந்திரன் இன்று உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும், எடுக்கும் புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை அதிகரிக்கும் நிதி நெருக்கடிகள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். 

சிம்மம்: 

சந்திரன் இன்று விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பணவரவு தாரளமாக இருக்கும். சுப செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சி தரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நற்பலன் கிடைக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். 

கன்னி: 

சந்திரன் இன்று லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு உண்டு. நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையால் லாபம் உண்டாகும். கல்யாண யோகம் கை கூடி வந்துள்ளது. 

துலாம்: 

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். தொழில் வியாபாரத்தில் கவனம் தேவை. இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொன் பொருள் சேரும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் பண வருமானமும் சேமிப்பும் உயரும். 

விருச்சிகம்: 

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் சந்திரனால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும். 

தனுசு:
 
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது. 

மகரம்: 

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடம்பர பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் அனுகூலங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். 

கும்பம்: 

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பழைய கடன்கள் தீரும். 

மீனம்: 

சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமும் நிதானமும் தேவை. இன்று உடல்நிலையில் வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய நபர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.​ 


 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

யூரிக் அமில அளவை குறைக்கும் எளிய வழிகள்
குழந்தைகளை நோயிலிருந்து பாதுகாக்கும் '6' உணவுகளின் லிஸ்ட்