உங்கள் நிறத்திற்கு பொருத்தமான ஆடைகளை எப்படி தேர்வு செய்வது..? இனியும் குழப்பம் வேண்டாம்..!!

By Anu KanFirst Published Feb 16, 2022, 2:16 PM IST
Highlights

உங்கள் தோற்றத்தை அழகாக கட்டுவதற்கு ஏற்ற ஆடைகளின் நிறம் என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம். 

நம்மை பிரகாசமாக கட்டுவதற்கு ஆள் பாதி, ஆடை பாதி என்கிற பழமொழி பொருத்தமாக அமையும். ஒவ்வொருவருக்கும், பலவிதமான நிறங்கள் பிடிக்கும். ஆனால், அதற்காக அவை அனைத்தையும் நாம் அணிந்து கொள்ள முடியாது. ஒவ்வொருவரும், தங்கள் நிறத்திற்கு ஏற்ற உடைகளை தேர்வு செய்வதற்கு விரும்பம் கொள்வர். ஆனால், சில சமயங்களில் நமக்கு பொருத்தமான உடை என்ன என்பதை தெரிந்து கொள்வதில் பல குழப்பங்கள் இருக்கும். நாம் அணிய கூடிய ஆடைகளின் நிறம், அதன் மெட்ரியல், டிசைன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆடைகளை அணிந்தால் போதும். உங்கள் தோற்றத்தை அழகாக கட்டுவதற்கு ஏற்ற ஆடைகள் என்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம். 

 வெளுத்த வெள்ளையாக பால் போன்ற நிறம்:

உங்கள் சருமத்தின் நிறம் வெளுத்த வெள்ளையாக பால் போன்ற நிறத்தில் இருந்தாள் எல்லா வகையான அடர் நிறங்களை நீங்கள் அணியலாம். குறிப்பாக, ரோஸ், கடற்படை நீலம், பாட்டில் பச்சை, அடர் சாம்பல் போன்ற அனைத்து நிறங்களும் உங்கள் வெளிர் நிறத்திற்கு ஏற்றதாக அமையும். இந்த கலரான உடைகள் உங்களை மேலும், அழகாகவும், பிரகாசமாகவும் காட்டும்.

மாநிறம் உடையவரா நீங்கள்?

உங்கள் தோலின் நிறம் மாநிறமாக இருந்தால், நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிறங்கள் உங்கள் சருமத்தின் நிறத்தை விட சிறிது அடர் நிறமாகவோ அல்லது சிறிது பிரகாசமான நிறமாக இருக்க வேண்டும். அதாவது க்ரீமி ஆரஞ்சு நிறம், மஞ்சள் நிறம், லாவண்டர், மெஜந்தா, இங்க் ப்ளூ போன்ற நிறங்களுடன் கான்ட்ராஸ்ட் கலர் சேர்த்தால் நிச்சயமாக உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். 

உங்கள் நிறம் வெளிர் மஞ்சளாக இருந்தால், மேலே சொன்ன நிறங்களின் வரிசையில் இருக்கும் நிறத்தை தவிர்ப்பது நல்லது. இவை உங்களை மிகவும், பிரகாச மற்று காட்டும்.

பார்ப்பதற்கு மிக புரொபெஷனலாக இருக்க வேண்டும் என்றால், அதற்கான சில நிறங்கள் கொண்ட ஆடைகளை தேர்வு செய்ய வேண்டும்.

காபி நிறம் : 

குளிர் காலங்களில் உங்களின் தோற்றம் சிறப்பாக இருக்க காபி நிறம் கொண்ட ஆடைகளை அணியலாம். இது உங்களின் அழகை சிறப்பாக வெளி காட்டும். காபி நிறத்தில் டாப்ஸ் அணிந்து கொண்டு, கீழே பிளாக் லெக்கிங்ஸ் அணிந்தால் அவ்வளவு அழகாக இருக்கும். இது ஒரு கிளாசி லுக்கை உங்களுக்கு தரும்.

டார்க் கருப்பு நிறம்:

நீங்கள் டார்க் கருப்பு நிறம் உடையவர்கள் எனில், ஒரே நிறத்தில் தனது ஆடையை அணியாமல் இரண்டு அல்லது மூன்று நிறங்களில், கலர் உடைகளை தேர்வு செய்யலாம். அதேபோல் இவர்கள்  பழுப்பு நிறம் கொண்ட உடைகளை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது இவர்களின் நிறத்தோடு ஒற்று போவதால் அது ஒரு ஈர்க்கும் தோற்றத்தை அளிக்காது.

அதேபோல் உங்கள் தோற்றத்திற்கு பளிச்சிடும் நிறங்கள் அழகாக அமையாது என்று நீங்கள் நினைத்தால் அதை வெறும் ஆடைகளில் மட்டுமில்லாமல் அணிகலன்கள் , பெல்ட், ஹாண்ட் பாக், காலணிகள் என்று அந்த நிறத்தை சேர்த்துக் கொள்ளலாம். இதுவே ஆடைகளை மிக சிறப்பாக அணிவதற்கான வழிமுறைகள் ஆகும்.

click me!