Deepika singh: நடனமாடும் போது காற்றில் பறந்த நடிகையின் உடை... ஷாக்கான கேமரா மேன்..வைரல் வீடியோ..!

Anija Kannan   | Asianet News
Published : Feb 16, 2022, 11:39 AM IST
Deepika singh: நடனமாடும் போது காற்றில் பறந்த நடிகையின் உடை... ஷாக்கான கேமரா மேன்..வைரல் வீடியோ..!

சுருக்கம்

சீரியல் நடிகை ஒருவர் இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்கும் போது, ஆடை காற்றில் பறந்த சம்பவம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாகவே வைரலாகும் பாடல்களுக்கு, பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் டிக்டாக், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நடனமாடுவது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது போன்ற வீடியோக்கள் ஏராளமானவை சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.

உலகின், எங்கோ ஒரு மூலையில் நெகிழ்ச்சியான, சில விசித்திரமான,வேடிக்கையான, சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கிறது. இன்றைய நவீன உலகில், பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள எல்லாவற்றிக்கும் ஆன்லைனில் பதிவிடுவது, ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அவை சில சமயங்களில், நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், சில வீடியோ நமக்கு கோபத்தை தூண்டும், சிலவற்றை வேடிக்கையாக கடந்து செல்வோம். அப்படியான சீரியல் நடிகை ஒருவர் இன்ஸ்டா ரீல்ஸ் எடுக்கும் போது, நடந்த சம்பவம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. 

  சீரியல் நடிகையான தீபிகா சிங்க, விஜய் தொலைக்காட்சியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பான 'என் கணவன் என் தோழன்' சீரியலில் 'சந்தியா' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் இல்லத்தரசிகள் அதிகம் விரும்பி பார்க்கப்பட்டது. 

இதில் பல போராட்டங்களை மீறி தன் கணவன் உதவியுடன் எப்படி போலீஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பதை வைத்து கதை இருக்கும். இதையடுத்து, தீபிகா சிங் அவர் நடித்த தொடரின் இயக்குனர் ரோஹித் ராஜ் கோயலையே திருமணம் செய்து கொண்டார்.  இவர்களுக்கு ஸோஹம் என்கிற ஒரு ஆண் குழந்தை உள்ளது.  இது போன்ற வீடியோக்கள் ஏராளமானவை சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன. இந்நிலையில், 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்திலுள்ள 'பான் கே டிட்லி தில் உடா' என்ற பாடலுக்கு தீபிகா சிங் இன்ஸ்டாவில் ரீலிஸ் செய்தபோது எதிர்பாராதவிதமாக உடை காற்றில் பறந்துள்ளது.

அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்த வீடியோவில், தீபிகா சிங் மஞ்சள் நிறத்தில் ஷார்ட் பிராக் மற்றும் வெள்ளை நிற ஷூ அணிந்துகொண்டு 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்திலுள்ள 'பான் கே டிட்லி தில் உடா' என்ற பாடலுக்கு உற்சாகமாக வெட்ட வெளியில் நடனமாடுகிறார்.  அப்போது அந்த பகுதியில் காற்று பலமாக வீச அவரது ஆடை காற்றில் பறந்துவிடுகிறது.  ஆனால் அவர் அதை சாதூர்யமாக சரி செய்துவிட்டு எவ்வித பதற்றமும் இல்லாமல், தனது நடனத்தை அதே உற்சாகத்தோடு மீண்டும் தொடர்கிறார்.

பாடல் வரிகளை இந்த வீடியோவிற்கு கேப்ஷனாக சேர்த்து தீபிகா சிங்க் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர், விமர்சித்து வருகின்றனர். இன்னும், சிலர் பக்கத்தில் இருக்கும் கேமரா மேன் குடுத்து வைத்தவர் என்று கிண்டல் செய்து வருகின்றனர். இன்னும், சிலர் தடைகளை தாண்டி நடனம் ஆடியது சிறப்பு என்கின்றனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Leadership Skills: உலகையே வழிநடத்தும் 5 ரகசியங்கள்! இனி நீங்கதான் எல்லோருக்கும் Boss!
Exercises For Joint Pain : மூட்டு வலி அவஸ்தைக்கு முற்றுப்புள்ளி!! ஒரே வாரத்தில் நிவாரணம்; ஒரே ஒரு பயிற்சி போதும்