எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் நீண்ட நாட்கள் வைக்க கூடாது..? தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..!!

Anija Kannan   | Asianet News
Published : Feb 16, 2022, 10:53 AM IST
எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் நீண்ட நாட்கள் வைக்க கூடாது..? தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..!!

சுருக்கம்

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் நீண்ட நாட்கள் வைக்க கூடாது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.  

இன்றைய நவீன கால கட்டத்தில் ஃபிரிட்ஜின் பயன்பாடு இல்லாத வீடு குறைவுதான். கிராமங்களிலும், ஃபிரிட்ஜின் பயன்பாடு தற்போது அதிகரித்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி,  நாம் எதிர்கொண்டு வரும் கொரோனா காலா கட்டம், பெரும்பாலானோர் அடிக்கடி வெளியே சென்று காய்கறிகளை வாங்கும் பழக்கத்தை மறக்கடிக்க செய்துள்ளது. இதனால், வீட்டில் இருக்கும் பிரிட்ஜில் காய்கறிகள், பழங்கள், சமைத்த உணவுப் பொருட்கள் என எல்லாவற்றையும் சேமித்து வைத்துக் கொள்கிறோம். சில சமயங்களில் நீண்ட நாட்கள்  ஃபிரிட்ஜில் உணவு பொருட்களை வைத்து பயன்படுத்துவது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. எனவே, எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் நீண்ட நாட்கள் வைக்க கூடாது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.


 
பிரெட்டை ஃபிரிட்ஜில் நீண்ட நாட்கள் வைக்கலாமா?

பிரெட்டை ஃபிரிட்ஜில் நீண்ட நாட்கள் வைப்பதால் அதன் ஃபிரெஷ் தன்மை போய்விடும். அதோடு ஈரப்பதம் குறைந்து வறண்டு விடும் ஃபிரிட்ஜில் குளிர் வெப்பநிலை’ உங்கள் பிரெட்டை உள்ள மாவுச்சத்தை மீண்டும் படிகமாக்கி’ ஈரப்பதத்தை இழக்கச் செய்வதால் அது பிரெட்டை சுவையற்றதாக மாற்றுகிறது. எனவே அவற்றை வெளியிலேயே குளுமையான இடத்தில் வைத்தால் நன்றாக இருக்கும்.

வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட பிரெட்டை 5-7 நாட்கள் காலாவதி தேதியுடன் வருவதால், அவற்றை குறிப்பிட்ட நேரத்திற்குள் உட்கொள்வது சிறந்தது. ஒருவேளை நீங்கள் இன்னும் சிறிது நாள் வைத்து உண்ண விரும்பினால் நீங்கள் பிரெட்டை ஒன்று இரண்டு நாட்கள் வைக்கலாம். இது பிரெட்டை புத்துணர்ச்சியை நீண்ட நேரம் வைத்திருக்க உதவும்.

பருப்பு குழம்பு:

பருப்பு குழம்பு போன்றவற்றை பிரிட்ஜில் வைத்தால் இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்தி விடுங்கள். ரொம்ப நாளைக்கு பருப்புக் குழம்பை பிரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் வாயுத்தொல்லை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சப்பாத்தி மாவு:

சப்பாத்தி மாவு பிசைந்து நீண்ட நாட்கள்  ஃபிரிட்ஜில் வைத்து உயோகிப்பது பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். 

பழங்கள்:

நறுக்காத முலாம் பழங்களை 2 வாரங்கள் வரை பிரிட்ஜில் வைக்கலாம். இதுவே நீங்கள் நறுக்கி விட்டால் 2-4 நாட்களுக்குள் சாப்பிட்டு விட வேண்டும்.

அன்னாசிபழத்தை 5-7 நாட்கள் வரை பிரிட்ஜில் சேமித்து வைத்து சாப்பிடலாம். பீன்ஸ் போன்ற பயிறு வகைகளை நான்கு நாட்களுக்கு மேல் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

 ஃபிரிட்ஜில் வைக்க கூடாத உணவுகள்:

 தர்பூசணி , கிர்னி பழம், மெலாம் பழம் போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழ வகைகளை ஃபிரிட்ஜில் வைப்பதை தவிருக்கள். இவை அறையில் வெப்பநிலையிலேயே தாங்கக் கூடிய பழங்கள் என்பதால் ஃபிரிட்ஜில் வைக்கத் தேவையில்லை. அதோடு இயற்கை வெப்பநிலையில் இருக்கும்போது அதன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தேன்:

தேனை நீண்ட நாட்கள் ஃபிரிட்ஜில் வைப்பதும் பலருடைய பழக்கமாக இருக்கும். ஆனால் அப்படி வைப்பதால் அதன் சுவை மற்றும் மருத்துவ குணங்கள் குறையும். எனவே அறையின் குளுமையான இடத்தில் வெளிச்சம்படாமல் வைத்தாலே நன்றாக இருக்கும்.

துளசி , ரோஸ்மெரி மூலிகை இலைகள்:

துளசி , ரோஸ்மெரி அல்லது மற்ற எந்த மூலிகை இலைகளையும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது அப்பரி வைப்பதால் அதன் மருத்துவ குணங்கள் குறைந்துவிடும். வேறு வழி இல்லாத பட்சத்தில் துணியில் வைத்து சுருட்டி காற்றுபுகாத டப்பாவில் அடைத்து ஒன்று இரண்டு நாட்கள் ஃபிரிட்ஜில் வைக்கலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்