
தாய்மை என்பது ஒரு வரமாகும். அப்படியான தாய்மை வரத்தை பெற்ற பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
பயணம்:
கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாத காலங்கள் 90 நாட்கள் வரை நீண்ட தூர பிரயாணம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். பலவீனமான பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புண்டு. காரம் அதிகமாக விரும்பினால் மிளகாய்க்கு பதில் மிளகு சேர்க்கலாம்.
கர்ப்பிணிகளின் தசைப்பிடிப்பு குறைய:
கர்ப்பிணியின் ஐந்தாம் மாதத்தில் வயிற்றுப்பிடிப்பு, வலி உண்டாகும். விளக்கெண்ணெயை காய்ச்சி, வெந்தயத்தை போட்டு அந்த எண்ணெயை தொப்புளில் விட்டு மென்மையாக மசாஜ் செய்து குளிக்கலாம். இதனால் தசைப்பிடிப்பு குறையும்.
குளியல்:
கர்ப்பகாலத்தில் குளியலும் கவனிக்க வேண்டிய ஒன்று. கர்ப்பம் தரித்து 40 நாட்கள் ஆனாலே அதிக குளிர்ந்த நீரில் அல்லது அதிக சூட்டில் வெந்நீரில் குளிக்க கூடாது. இது வயிற்றில் இருக்கும் சிசுவை தாக்கும். மாறாக மந்தமான நீரில் தான் குளிக்க வேண்டும்.
முறையான உணவுகள்:
குழந்தையின் கண் பார்வை கூர்மையடைய வைட்டமின் ஏ சத்துள்ள உணவுகள் எடுக்கலாம். வெண்ணெய், பால், தயிர், முட்டையின் மஞ்சள் கரு, தக்காளி மாம்பழம், பப்பாளிப்பழம், முள்ளங்கி, காரட், பரங்கிக்காய், முட்டைக்கோஸ், கறிவேப்பிலை, புதினா, முள்ளங்கி இலை, கொத்துமல்லி, கீரைகள் போன்றவற்றை உணவில் சேர்த்து வர வேண்டும்.
வைட்டமின் சி அடங்கிய பச்சைப்பட்டாணி, பச்சை பயறு, பெரிய நெல்லிக்காய் ஆரஞ்சு பழம், திராட்சை, வாழைப்பழம், வெள்ளரிக்காய், பேரிக்கா.
ஓய்வு அவசியம்:
கர்ப்பிணி பெண்கள் மல்லாந்து படுக்க கூடாது. குறிப்பாக தூங்கும் போது. ஆனால் ஓய்வாக இருக்கும் போது சில நிமிடங்கள் மல்லாந்து படுத்தபடி மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியே விடவும். தினமும் பல முறை மூச்சை உள்ளிழுத்து வெளியே விடும் பயிற்சி செய்தால் பிரசவக்காலத்தில் சுகமாய் பிள்ளை பெறலாம்.
குழந்தைக்கு இரத்தம் ஊற செய்ய வேண்டியவை:
தினமும் வெந்நீரில் தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரத்தம் விருத்தியாகும். குழந்தைகள் ஆற்றலோடு இருப்பார்கள். சிறந்த புத்திக்கூர்மையோடு வளர்வார்கள்.
சிறுநீர் நச்சு வெளியேற்றம்:
கர்ப்பகாலத்தில், கர்ப்பிணிகளுக்கு முறையான சிறுநீர் வெளியேறுவது அவசியமாகும். வாரத்தில் மூன்று நாட்கள் முருங்கை கீரை எடுத்து வேக வைத்து அந்த நீரை குடித்து வந்தால் உடலில் தேங்கியிருக்கும் நச்சு வெளியேறிவிடும்.
அழகான குழந்தைக்கு, குங்குமப் பூ அவசியம்:
கர்ப்பகாலத்தில் 7 ஆம் மாதத்தில் பாலில் சிறிதளவு குங்குமப்பூ கலந்து குடித்து வந்தால் குழந்தை நல்ல சிகப்பு நிறமாக அழகாக பிறப்பார்கள்.
வாந்தி:
கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் அதிகமாக வாந்தி இருக்கும். தண்ணீர் கூட வாந்தியை உண்டாக்கும். எதை சாப்பிட்டாலும் வாந்தி எடுப்பார்கள். இவர்கள் ஏலக்காயை எடுத்து ஒன்றிரண்டாக தட்டி அடுப்பில் சூடேற்றி பொடியாக்கவும். இதை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் வாந்தி கட்டுப்படும்.
தலைச்சுற்றல்:
மசக்கையால் தலைச்சுற்றல் பிரச்சனை இருந்தால் ஒரு லிட்டர் தண்ணீரில் கால் பங்கு பார்லி போட்டு கொதிக்க வைத்து, சிறிது உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து குடித்துவந்தால் மசக்கையால் உண்டாகும் அசெளகரியம் மறையும்.
எனவே, நீங்கள் உடல் ஆரோக்கியமாகும், மகிழ்ச்சியாகவும் கவனமாகவும் இருத்தல் அவசியம்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.