வெஸ்டர்ன் டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்துவோருக்கு ஆபத்து...? எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..!

Anija Kannan   | Asianet News
Published : Feb 16, 2022, 07:56 AM IST
வெஸ்டர்ன் டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்துவோருக்கு ஆபத்து...? எச்சரிக்கும் ஆய்வாளர்கள்..!

சுருக்கம்

வெஸ்டர்ன் டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்தினால் மூலம் அல்லது பெட்டக்ஸ் பகுதியில், கட்டிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய நவீன உலகில் செல்போன் பயன்படுத்துவோர் அதிகரித்து காணப்படுகின்றனர். செல்போன் உபயோகிக்காத மனிதர்கள் குறைவு, அதேபோன்று, செல்போன் டவர் இல்லாத இடமும் குறைவாகவே உள்ளது. அந்த அளவுக்கு உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கி உள்ளது. மொத்தத்தில் இன்றைய உலகில் செல்போன்,  மனிதர்களின் உயிர் நாடியாக இருந்து வருகிறது.

’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவோருக்கும்  பொருந்தும். பேசுவதற்கும், பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்வதற்கும் அவ்வப்போது செல்போன்களைப் பயன்படுத்திக்கொள்வதில் தவறே இல்லை. ஆனால், கால வரைமுறை இல்லாமல் தேவைற்ற செயல்களில் செல்போன்களைப் அதிகப்படியாக பயன்படுத்துவது சில விசித்திரமான உடல் பிரச்சினைகளை உங்களுக்கு ஏற்படுத்துகிறது. 

பொதுவாக மலச்சிக்கல், மலம் கழிப்பதில் சிரமம், கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் உபாதைகள் போன்ற காரணங்களால் மூலம் நோய் வரும்.

ஆனால், சமீபத்தில் வெளிவந்துள்ள ஆய்வின் முடிவில், டாய்லெட்டில் செல்போன் பயன்படுத்தினால் மூலம் அல்லது பெட்டக்ஸ் பகுதியில், கட்டிகள் உருவாகும் ஆபத்து இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

மேலும், நீண்ட நேரம் அமர்ந்து கொண்டு செல்போன் பயன்படுத்துவதால் கீழ் மலக்குடலில் ஆசனவாய் நரம்புகளில் அழுத்தம் அதிகரிக்கிறது எனக்கின்றனர் மருத்துவர்கள்.

 மூலம் என்பது ஒரு நாளில் நீண்ட நேரம் அமர்வதால் வராது. தினம் தினம் அப்படி அமர்ந்திருப்பது நிச்சயம் மூலத்தை உண்டாக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த டாய்லெட்டில் நீண்ட நேரம் அமரும் பழக்கம் இன்று செல்போன்களால் மட்டுமல்ல. இதற்கு முன் பிடித்த புத்தகத்தை டாய்லெட்டில் அமர்ந்து கொண்டு படிக்கும் பழக்கம் இருந்தது. மூலம் வருவதற்கு முன் அறிகுறிகளாக எரிச்சல், அரிப்பு, ரத்தக் கசிவு, கட்டிகள், மலம் கழித்த பின்னரும் கழிக்காத உணர்வு போன்றவை பட்டியலிட்டுள்ளனர்.

இந்த அறிகுறிகள் தென்பட்டால் மூலம் வராமல் தவிர்க்க நார்ச்சத்து , தினமும் உடற்பயிற்சி, டாய்லெட்டிற்கு செல்போன் எடுத்துச் செல்வதை தவிர்த்தல் போன்ற விஷயங்களை மேற்கொள்ளுங்கள் என்று பரிந்துரைக்கப்படுகிறது.

குறிப்பாக, வெஸ்டர்ன் டாய்லெட்டுகள்:

வெஸ்டர்ன் டாய்லெட்டுகளைப் பயன்படுத்தும் பலரும் சென்ற வேலையை முடிக்காமல் நீண்ட நேரம் செல்போனை பயன்படுத்துவதில் மும்முரமாக இருப்பார்கள். இப்படித்தான் சீனாவில் மணிக்கணக்கில் செல்போன் பயன்படுத்தியதில் அவரின் குடலே வெளியே வந்துவிட்டதாக செய்திகள் வைரலாகப் பரவியது.

பிரச்சனை வராமல் தடுப்பது எப்படி?

உங்கள் செல்போனை 15-20 நிமிடங்களுக்கு மேல் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டாம். 

மூலம் வருவதற்கு முன் அறிகுறிகளாக எரிச்சல், அரிப்பு, ரத்தக் கசிவு, கட்டிகள், மலம் கழித்த பின்னரும் கழிக்காத உணர்வு போன்றவையாகும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் மூலம் வராமல் தவிர்க்க நார்ச்சத்து , தினமும் உடற்பயிற்சி, டாய்லெட்டிற்கு செல்போன் எடுத்துச் செல்வதை தவிர்த்தல் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். 

அதிகப்படியான செல்போன் பயன்பாட்டினால் ஏற்படும் பிற உடல் உபாதைகள்:

அதிக நேரம் செல்போன் பேசும் போது, அதிலிருந்து வெளிவரும் ரேடியேஷன், அதிகச்சூட்டை உண்டாக்கும். அது, நம்முடைய மூளை, காது, இதயம் போன்றவற்றை பாதிக்கும். அதுமட்டுமின்று, ஒருவித மன அழுத்தமும் உண்டாகும்.

பொதுவாக, செல்போன்களின் அதிகப்படியான பயன்பாடு கார்பல் டன்னல் (Carpal Tunnel) நோய்க்குறியின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும். இது கட்டைவிரல், ஆள்காட்டி விரல், நடுத்தர மற்றும் மோதிர விரலின் பாதியில் வலி, கூச்ச உணர்வு, எரியும் உணர்வு மற்றும் உணர்வின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகிறது.

நீண்ட நேரமாகவும் செல்போனில் மெசேஜ் டைப் செய்பவர்களுக்கு கை விரல்களில் உள்ள தசை நார்களில் பாதிப்புகள் ஏற்படும். ஒரே செயலை தொடர்ந்து செய்யும்போதும், ஹோல்டு செய்யும்போதும் கை விரல் தசைகளில், ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். மேலும், தசை நார்கள் கிழிந்துபோகும். இதனால், சில சமயங்களில் விரல்களை அசைக்க முடியாத நிலையும் கூட ஏற்படலாம்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

முடி வளர்ச்சியை தூண்டும் 8 உணவுகள்
ஒரு துண்டு கிவி பழம் வாரி வழங்கும் நன்மைகள்