
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான அனுஷ்கா சர்மா ''ஆர்கானிக்'' முறையில் தக்காளி பழத்தில் ஜாம் செய்து அசத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகை அனுஷ்கா சர்மா, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக, கொண்டு உருவாகும் சக்தா எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்து வருகிறார்.
இவர், பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கடந்த டிசம்பர் 11, 2017-ல் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வாமிகா என்ற ஒரு வயது மகள் உள்ளார். திருமணத்திற்கு பின் படங்களில் பிஸியாக நடித்து வந்த அனுஷ்கா, குழந்தை பிறந்த பின் சினிமாவுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்தார்.
இந்நிலையில், தற்போது சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள அனுஷ்கா சர்மா நடிப்பில், சக்தா எக்ஸ்பிரஸ் திரைபடம் தொடர்பான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அனுஷ்கா சமையலில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், அவர் தனது சகோதரர் கர்னேஷ் ஷர்மாவுடன் இணைந்து தனது தயாரிப்பு நிறுவனமான க்ளீன் ஸ்லேட் பிலிம்ஸின் கீழ் தனது பல படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
குழந்தை பிறப்பதற்கு முன்னாள் வீட்டில் ஒய்வில் இருந்த அனுஷ்கா, கடந்த 2020-ம் ஆண்டு ஊரடங்கு சீசனில் வலைதளங்களில் உணவு மற்றும் சமையல் தொடர்பாக வீடியோக்களை பார்ப்பதில் பிஸியாக இருந்துள்ளார்.
இந்த வீடியோக்களை பார்ப்தோடு மட்டுமல்லாமல், அந்த உணவுகளை எப்படி செய்வது என்று முயற்சியும் செய்துள்ளார். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக அனுஷ்கா தான் ஜாம் மேக்கிங் செய்த வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், நான் பல உணவு வலைப்பதிவுகளைப் பார்த்தபோது, 2020 லாக்டவுனுக்குத் திரும்பது போல் உள்ளது. இதனால் இந்த ஜாம் செய்யும் வீடியோவைப் படமாக்க முடிவு செய்தேன், மேலும் 2021 க்குள் கொரோனா வைரஸ் ஒழிந்துவிடும் என்று நினைத்தேன் என்று கூறியுள்ளார்.
இந்த ஜாம் தயார் செய்வதற்காக புதிய தக்காளிகளைத் தேடி ஒரு பழத்தோட்டத்திற்குச் சென்றுள்ளார். இதற்காக அவர் கையில் ஒரு கூடையுடன் தன் நாயின் அருகில் இருக்கிறார். அந்த தோட்டத்தில், அவர் பழுத்த தக்காளியைப் பறித்து, வீட்டிற்குத் திரும்பி வருகிறார். அதன்பிறகு, தக்காளியை நீரில் கழுவி, தண்ணீரில் கொதிக்க வைக்கிறார். சிறிது நேரத்திற்கு பின் தக்காளியை எடுத்து தோல் உறித்து குளிர்ந்த நீரில் கழுவி, தோலுரித்து வெட்டுகிறார்.
அதன்பிறகு ஜாம் தயாரிப்பதற்காக தக்காளியை ஒரு பாத்திரத்தில் சமைக்கிறாள். இந்த ஜாமை காலை உணவாக ரொட்டியுடன் தனது பெற்றோருக்கு பரிமாறுகிறார். இதன் சுவையால் ஈர்க்கப்பட்ட அனுஷ்காவின் தந்தை தனது மனைவயின் காதில் ஏதோ முனுமுனுத்து சிரிக்கிறார். இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ''ஆர்கானிக்'' உணவு தயாரிப்பு அருமையாக உள்ளது என்று தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர் பணக்கார்களுக்கு இவ்வளவு அருமையாக சமைக்க கூடா தெரியுமா என்று கிண்டலாக பதிவு செய்து வருகின்றனர். இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.