Healthy Sperm Count : ஆண்களின் விந்தணுவின் தரம் சரியாக இல்லாவிட்டால், அவர்களின் பாலியல் வாழ்க்கை பாதிக்கும்.
இன்றைய காலகட்டத்தில், பெரும்பாலான ஆண்கள் விந்தணு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கின்றன. இந்த பிரச்சினையானது ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். இதனால் கருத்தரிப்பதில் சிரமம் ஏற்படும். மேலும், இது பாலியல் வாழ்க்கையும் மோசமாக பாதிக்கிறது. எனவே, விந்தணு ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆண்கள் செய்யும் சில தவறுகள் அவர்களது விந்தணுவின் தரத்தை குறைக்கும். எனவே, விந்தணுவின் தரத்தை மேம்படுத்த ஆண்கள் செய்யக்கூடாத சில தவறுகள் இங்கே உள்ளன. அவை..
விந்தணுவின் தரத்தை மேம்படுத்த ஆண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்:
undefined
1. குறைவாக தூங்க வேண்டாம்:
ஒரு அறிக்கையின் படி, குறைவான மணி நேரம் தூங்கும் ஆண்களுக்கு சிறந்த விந்தணு தரம் இருக்காது என்று சொல்லப்பட்டுள்ளது. இது பற்றி நடத்தப்பட்ட பல ஆய்வுகளில், 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கும் ஆண்களுக்கு 31 சதவிகிதம் குறைவான கருவுறுதல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, ஆண்கள் கண்டிப்பாக 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.
2. சிகரெட் மற்றும் மதுவில் இருந்து விலகி இருங்கள்:
சிகரெட் பிடிப்பது மது அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது அனைவருக்கும் தெரியும். குறிப்பாக, இவை விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தை குறைக்கிறது. ஆனால், இது பற்றி சிலருக்கு மட்டுமே தெரியும். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு சிகரெட் மற்றும் மது அருந்தும் பழக்கம் இருந்தால், அதை உடனே நிறுத்தி விடுங்கள்.
இதையும் படிங்க: Relationship Advice : உடலுறவில் கிளைமேக்ஸ்.. ஆனா நோ யூஸ்... புலம்பும் பெண்!
3. வெந்நீரில் குளிக்காதீர்கள்:
ஆய்வு ஒன்றின் படி, ஆண்கள் சூடான நீரில் குளிப்பது அவர்களின் விந்தணு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் மற்றும் கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்கும்.
4. இறுக்கமான உள்ளாடைகளை அணிய வேண்டாம்:
ஆண்கள் இறுக்கமான உள்ளாடைகளை அணிந்தால், அது அவர்களின் விந்தணுக்களை எதிர்மறையாக பாதிக்கும். ஒருவேளை உங்களுக்கு இப்படி இருக்குமான உள்ளாடைகளை அணியும் பழக்கம் இருந்தால் உடனே அதை சரி செய்யவும். இல்லையெனில், அது விந்தணுவை பாதிக்கும்.
இதையும் படிங்க: ஆண்களே! விந்தணுவின் நிறம் வெள்ளைக்கு பதிலாக மஞ்சள் நிறமா..? காரணம் இதுதான் தெரிஞ்சிகோங்க!
5. கடுமையான உடற்பயிற்சி செய்ய வேண்டாம்:
உடலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும் கடுமையான உடற்பயிற்சி செய்வது ஆண்களுக்கு கருவுறுதலை பாதிக்கும். இதனால் போதிய அளவு விந்தணு உருவாகும் உற்பத்தி சாத்தியமில்லை. எனவே, நீங்கள் நல்ல உடல் தகுதியுடன் இருக்க மட்டுமே உடற்பயிற்சி செய்யுங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D