Successful Love Marriage : உங்களது காதல் திருமண வாழ்க்கை வெற்றிக்கரமாக இருக்க உதவும் சில குறிப்புகள் இங்கே.
'காதல்' என்பது மிகவும் ஒரு அழகான உணர்வு ஆகும். இது யாருக்கு, எப்போது, யார் மீது வேண்டுமானாலும் வரும். காதல் நிறத்தையும் வயதையும் பார்ப்பதில்லை. இதில் இருவரும் ஒருவருக்கொருவர் உணர்வுகளை மதிக்கிறார்கள். காதல் திருமணத்தை அடையும் போது தான் வெற்றியடைகிறது. காலப்போக்கில், பெற்றோர்களும் தங்கள் சிந்தை மாற்றி, தங்கள் குழந்தைகளின் விருப்பத்தை ஏற்று அவர்களின் காதல் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள தொடங்குகிறார்கள். ஆனால், பல சந்தர்ப்பங்களில் காதலில் ஒருவரையொருவர், எவ்வளவு விரைவில் ஈர்க்கப்படுகிறார்களோ, திருமணத்திற்குப் பிறகு அவர்களுக்குள் அதிகம் முரண்பாடுகள் ஏற்பட தொடங்குகின்றது. நீங்களும் இத்தகைய சூழ்நிலையை சந்திக்கிறீர்கள் என்றால், அதை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
வெற்றிக்கரமான காதல் திருமண வாழ்க்கைக்கு சில குறிப்புகள்:
undefined
1. வெளிப்படையாக பேசுங்கள்:
எந்த ஒரு வலுவான உறவின் அடித்தளம் பேசுவது தான். உங்கள் உணர்வுகள், எண்ணங்கள், கவலைகள் போன்ற அனைத்தையும் குறித்து உங்கள் துணையுடன் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் பேசுங்கள். அதையே அவர்களையும் செய்ய ஊக்குவிக்கவும்.
2. மரியாதை கொடுங்கள்:
ஒவ்வொருவருர் கருத்துக்கள், மதிப்புகள் மற்றும் யோசனைகளை மதிக்கவும். அதுமட்டுமின்றி, ஒருவருக்கொருவர் இயல்பை ஏற்றுக் கொள்ளுங்கள். முக்கியமாக, உங்கள் துணையை மாற்ற முயற்சிப்பதை தவிர்க்கவும்.
3. நம்பிக்கை:
காதல் திருமணத்தில் மிக முக்கியமானது நம்பிக்கை. நீங்கள் உங்கள் துணைக்கு வாக்கு கொடுத்தால், அதை கண்டிப்பாக நிறைவேற்றவும். அப்போதுதான், அவர்கள் உங்களை நம்புவார். எனவே, வாக்குறுதி கொடுத்தால் கண்டிப்பாக அதை நிறைவேற்ற மறக்காதீர்கள்.
இதையும் படிங்க: புதிதாக திருமணமான பெண்களே.. திருமண வாழ்க்கை ஹாப்பியா இருக்க.. கண்டிப்பா இந்த 4 விஷயங்களை தெரிஞ்சுக்கோங்க
4. தரமான நேரம்:
உங்கள் உறவே வலுப்படுத்த இருவரும் ஒன்றாக தரமான நேரத்தை செலவிடுங்கள். டேட்டிங் இரவுகள், பொழுதுபோக்குகளை பகிர்ந்து கொள்ளுங்கள் அல்லது பேசுங்கள். மேலும், ஒவ்வொரு நாளும் ஒருவருக்கொருவர் கண்டிப்பாக சிறிது நேரம் ஒதுக்குங்கள்.
5. சமரசம்:
எந்த ஒரு உறவிலும் எப்போதும் கருத்துவேறுப்பாடுகள் இருப்பது வழக்கம். அதை சமரசம் செய்து கொள்வதற்கும், அதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்கும் கற்றுக் கற்றுக் கொண்டு, வேறுபாடுகளை தீர்த்து, அன்பை பேணுங்கள்.
இதையும் படிங்க: Relationship Tips : உறவில் விரிசல் வருவதற்கு 'இந்த' எதிர்பார்ப்புகளே காரணம்.. இனி இந்த தப்ப செய்யாதீங்க!
6. ஒருவருக்கொருவர் ஆதரவாக இருங்கள்:
உங்களது காதல் திருமண வாழ்க்கை வெற்றிகரமாக இருக்க, ஒருவருக்கொருவர் மிகப்பெரிய ஆதரவாளர்களாக இருங்கள். குறிப்பாக, தனிப்பட்ட மற்றும் தொழில் முயற்சிகளில் ஒருவரை ஒருவர் ஊக்கப்படுத்துங்கள்.
7. நியாயமான எதிர்பார்ப்புகள்:
உங்களது காதல் திருமணம் மகிழ்ச்சியாகவும், வலுவாகவும் இருக்க நியாயமான எதிர்பார்ப்புகளை கொண்டிருங்கள். குறிப்பாக, நம்பத்தகாத எதிர்பார்ப்புகள், ஏமாற்றத்தையும் மனக்கசப்பையும் ஏற்படுத்தும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
8. பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும்:
உறவில் கருத்து வேறுபாடுகள், மோதல்கள் வருவது இயல்பு தான். ஆனால், அதை அன்பாகவும், மரியாதையாகவும் கையாள கற்றுக் கொள்ளுங்கள். ஒருவரையொருவர், குற்றம் சாட்டுவதை தவிர்த்து, ஒன்றாக தீர்வு காண்பதில் கவனம் செலுத்துங்கள்.
9. நெருக்கம்:
ஒவ்வொரு திருமணமான தம்பதியினருக்கும், உடல் மற்றும் உணர்ச்சி இணைப்பு மிகவும் அவசியம். நீங்கள் உணர்ச்சி தொடர்பை வெளிப்படுத்த வாய்மொழி மற்றும் உடல் ரீதியான தொடுதல் மூலம் உள்ளது அன்பை காட்டுங்கள்.
10. அளவை விட தரம் அவசியம்:
நீங்கள் உங்கள் துணையுடன் நேரத்தை செலவிடுவது அவசியம் தான். ஆனால், அதிலும் தரம் அவசியம். அதாவது, ஒன்றாக நேரத்தை செலவிடுவதை விட காட்டிலும், அர்த்தமுள்ள நேரத்தை செலவிடுவது நல்லது.
11. மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்:
உங்கள் இருவருக்கும் இடையே ஏதாவது சண்டைகள் வந்தால் உங்களது கோபத்தையும், வெறுப்பையும் மனதில் வைத்திருப்பது உறவை விஷமாக்கிவிடும். எனவே, மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள். கடந்த கால தவறுகளை விட்டுவிட்டு புதிய பாதையை நோக்கி முன்னேறுங்கள்.
12. மறக்க முடியாத அனுபவத்தை கொடுங்கள்:
நீங்கள் உங்கள் துணைவியுடன் தரமான நேரத்தை செலவிடும்போது, அவர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை கொடுங்கள். இதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் மறக்கவே மாட்டார்கள்.
13. காதலை உயிர்ப்புடன் வைக்கவும்:
காதல் அம்சங்களையும் பராமரிப்பது மிகவும் முக்கியம். எனவே, அன்பு மற்றும் பாராட்டுகளை வெளிப்பாடுகளுடன் ஒருவரையொருவர் ஆச்சரியப்படுத்துங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D