பீர் ஸ்பா என்றால் என்ன? என்பது குறித்தும் இதனால் என்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு பீர் அடங்கிய ஷாம்பூவின் விளம்பரம் வெளியாகி மிகப்பெரிய சென்ஷேனாக மாறியது. இந்த விளம்பரம் ஆண்களை மட்டுமின்றி, பெண்களும் ஈர்த்தது. மென்மையான, துள்ளலான மற்றும் பட்டு போன்ற முடி கிடைக்கும் என்று கூறப்பட்டது. இதனால் பலரும் பீர் ஷாம்புவை பயன்படுத்த தொடங்கினர்.
தற்போது 'பீர் ஸ்பா' என்ற ஆரோக்கிய செயல்முறை உலகம் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது. ஆனால் பீர் ஸ்பா என்றால் என்ன? என்பது குறித்தும் இதனால் என்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
undefined
பீர் நிரப்பப்பட்ட ஒரு தொட்டியில் மூழ்கி, மூழ்கி, மால்ட், ஈஸ்ட் மற்றும் ஹாப்ஸின் அனைத்து நன்மைகளிலும் உங்கள் உடலை ஊறவைப்பது தான் பீர் ஸ்பா ஆகும். வளர்ந்து வரும் அழகு மற்றும் ஆரோக்கிய பழக்கங்களை பின்பற்றுவதில் இந்தியா முன்னேறி வருகிறது என்றாலும், பீர் ஸ்பா இன்னும் இங்கு பெரிதாக ட்ரெண்டாகவோ அல்லது பிசினஸாகவோ மாறவில்லை. ஆனால் மேற்கத்திய உலகத்தைப் பொறுத்தவரை பீர் ஸ்பா என்பது ஏற்கனவே வளர்ந்து வருகிறது ஒரு போக்கும். செக் குடியரசின் பராகுவே நகரில் செயல்படும் ஸ்பா பீர்லேண்ட் என்ற நிறுவனம் உலகின் மிகப்பெரிய பீர் ஸ்பாவாக கருதப்படுகிறது.
ஸ்பா பீர்லேண்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில்.பீர் ஸ்பா குறித்து பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, முதல் பீர் குளியல் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. பீர் குளியல், அவற்றின் உள் பயன்பாடு உட்பட, நீண்ட காலமாக நாட்டுப்புற மருத்துவத்தில் நடைமுறையில் உள்ளது, நமது பல நோய்களுக்கு ப்ரூவரின் ஈஸ்ட்டை பரிந்துரைத்தனர். இது பீர் உற்பத்தியின் துணை தயாரிப்பு மற்றும் பண்டைய காலங்களிலிருந்து மருத்துவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஐரோப்பாவில் பல நூற்றாண்டுகளாக பீர் குளியல் பாரம்பரியம் உள்ளது. பழமையான பீர் குளியல் கி.பி 921 க்கு முந்தையது என்று கூறப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் மட்டும், #beerspa 25,000 பதிவுகளை கொண்டுள்ளது. ஒவ்வொன்றிலும், மக்கள் பீர் கலவையால் நிரப்பப்பட்ட மரத் தொட்டிகளில் மூழ்குவதையும், அவ்வப்போது பருகுவதற்கு ஒரு கிளாஸை கையில் வைத்திருப்பதையும் அதில் பார்க்க முடிகிறது. இந்த பீர் குளியல் சருமத்திற்கு மட்டுமின்றி உங்கள் மனநிலையையும் மாற்றும் என்று கூறப்படுகிறது.
உலகின் முதல் வணிக பீர் ஸ்பா 2006 இல் செக் குடியரசில் திறக்கப்பட்டது. அப்போது முதல், இதுபோன்ற பல இடங்கள் உலகம் முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. உலகளாவிய வளர்ந்து வரும் ஆரோக்கிய நடைமுறைகளில் ட்ரெண்டாக மாறியுள்ளது.
பீர் ஸ்பாவால் சருமத்திற்கு ஏற்படும் நன்மைகள் குறித்து குருகிராமில் உள்ள சிகே பிர்லா மருத்துவமனையின் ஆலோசகர் தோல் மருத்துவரான டாக்டர் ரூபன் பாசின் பாஸ்சி விளக்கினார். அப்போது பேசிய அவர் : பீர் குளியல் என்பது அசாதாரணமானதாகத் தோன்றினாலும், அது சருமத்திற்கு ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது என்று தெரிவித்தார்..
மேலும் "பீர் மால்ட், ஈஸ்ட் மற்றும் ஹாப்ஸ் ஆகியவற்றுடன் தயாரிக்கப்படுகிறது. இந்த பொருட்களில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் சருமத்திற்கு நன்மை பயக்கும் தாதுக்கள் உள்ளன. ஹாப்ஸில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் சருமத்திற்கு ஒரு கவசமாக வேலை செய்யலாம். வயதான செயல்முறையை மெதுவாக்கலாம், பீரின் இயற்கையான அமிலங்கள் கூட மிதமான எக்ஸ்ஃபோலியண்ட்களாக வேலை செய்து இறந்த சரும செல்களை அகற்றி, மென்மையான, அதிக ஒளிரும் சருமத்தை ஊக்குவிக்கும். நீங்கள் இளமையாக மாறலாம்” என்று தெரிவித்தார்.
பீர் குளியல் பல நன்மைகளை அளித்தாலும், அதனால் ஏற்படும் அபாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக பீர் குளியால் ஒவ்வாமை ஏற்படலாம். ஹாப்ஸ் அல்லது ஈஸ்ட் போன்ற பீரில் உள்ள எந்தப் பொருட்களுக்காவது உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் நீங்கள் பீர் குளியல் எடுத்துக்கொள்ள கூடாது.
உணர்திறன் வாய்ந்த தோல் : உங்கள் தோல் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பார்க்க, குறிப்பாக உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். ஆல்கஹால் உள்ளடக்கம்: பீரின் ஆல்கஹால் உள்ளடக்கம் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தாலும், அது இன்னும் சில நபர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். ஆல்கஹாலின் உலர்த்தும் விளைவுகளைத் தவிர்க்க, 2 வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே பீர் குளியலை எடுப்பது சிறந்தது.
இந்தியாவில் பீர் குளியல்
இந்தியாவில் இன்னும் இந்த பீர் ஸ்பா ட்ரெண்டாகவில்லை. ஏனெனில் இந்தியா என்பது ஐரோப்பாவைப் போல பீர் குடிக்கும் நாடு அல்ல, இந்தியா முழுவதும் பல மதுபான உற்பத்தி நிலையங்கள் உருவாகியுள்ள நிலையில், நாட்டில் இன்னும் பீர் ஸ்பா திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் தற்போது உலகளவில் ட்ரெண்டாகி வரும் இந்த பீர் ஸ்பாவை இந்தியா மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள பல நாடுகளும் ஏற்றுக்கொள்ளலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.