குட்டீஸ்க்கு பிடிச்ச பன்னீர் பிரெட் பால்.. ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு செஞ்சு கொடுங்க!

By Kalai SelviFirst Published Sep 17, 2024, 5:20 PM IST
Highlights

Paneer Bread Balls Recipe : இந்த பதிவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பன்னீர் பிரட் பால்ஸ் ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஈவினிங் டைம்ல குழந்தைகள் ஸ்னாக்ஸ் வேண்டும் என்று கேட்கிறார்களா? ஆனால் என்ன ஸ்நாக்ஸ் செய்வது கொடுப்பது என்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பன்னீர் மற்றும் பிரட் இருக்கிறதா? அப்படியானால் அதைக் கொண்டு 'பன்னீர் பிரட் பால்ஸ்' செய்து கொடுத்து அசத்துங்கள். குழந்தைகள் இந்த ஸ்னாக்ஸ் ரொம்பவே விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இதில் கால்சியம் சத்து இருப்பதால் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. இந்தப் பன்னீர் பிரெட் பால்ஸ் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காது மிகவும் சுலபமான முறையில் செய்து விடலாம். சரி வாங்க.. இப்போது இந்த பதிவில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பன்னீர் பிரட் பால்ஸ் ரெசிபி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

இதையும் படிங்க:  10 நிமிடத்தில் டீக்கு சுடசுட முட்டை போண்டா.. இப்படி செஞ்சி பாருங்க!!

Latest Videos

பன்னீர் பிரட் பால்ஸ் செய்ய தேவையான பொருட்கள் :

பன்னீர் - 1 கப்
பிரட் - 5 துண்டுகள்
உருளைக்கிழங்கு - 2 (வேகவைத்தது)
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
ரவை - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
தக்காளி சாஸ் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் - தேவையான அளவு

இதையும் படிங்க:  ஈவினிங் ஸ்நாக்ஸாக முட்டைக்கோஸில் இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. சூப்பரா இருக்கும்!

செய்முறை :

பன்னீர் பிரட் பால்ஸ் செய்ய முதலில், எடுத்து வைத்த பன்னீரை துருவி பிறகு அதை நன்கு பிசைந்து கொள்ளுங்கள். இப்போது ஒரு அகலமான பாத்திரத்தில் பிசைந்து வைத்த பன்னீர் வேக வைத்து எடுத்து உருளைக்கிழங்கு மற்றும் தேவனோடு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். அதன் பிறகு பிரட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி பிரெட்டை தண்ணீரில் நனைத்து, பின் தண்ணீர் இல்லாமல் பிழிந்து, அதை பிசைந்து வைத்த மாவுடன் சேர்க்கவும். மேலும் இதனுடன் ரவை பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் கொத்தமல்லி இலை மஞ்சள் தூள் தக்காளி சாஸ் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் நன்றாக சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிதளவு எடுத்து உருண்டைகளாக உருட்டி அதை எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். இப்படியே எல்லா மாவையும் உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து 
எடுத்தால் சுவையான பன்னீர் பிரட் பால்ஸ் தயார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!