Pasi Paruppu Adai Dosai : உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கான சுவையான பாசிப்பருப்பு அடை தோசை செய்வது குறித்து இங்கு பார்க்கலாம்.
நீங்கள் டயட்டில் இருப்பவரா? இன்று காலை ருசியாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தெரியவில்லையா? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கானது தான். உங்கள் வீட்டில் ஒரு கப் பாசிப்பருப்பு இருக்கிறதா? அப்படியானால் அதைக் கொண்டு சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த அடை தோசை செய்து சாப்பிடுங்கள். உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த அடை தோசை ரொம்பவே நல்லது. முக்கியமாக இந்த தோசை செய்வது ரொம்பவே சுலபம்.
பாசிப்பருப்பு அடை தோசை நன்மைகள் :
undefined
பாசிப்பருப்பில் புரதம் அதிகமாக இருப்பதால், இது பசியை தூண்டும் ஹார்மோனில் உற்பத்தியை குறைக்கும். இதனால் பசி உணர்வு கட்டுப்படுத்தப்படும். நமக்கு அடிக்கடி பசித்தால் ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது வழக்கம். இதனால் எடை கூடுவது தான் மிச்சம். இத்தகைய சூழ்நிலையில், பாசிப்பருப்பில் அடை தோசை செய்து சாப்பிட்டால் தேவையில்லாத பசியை குறைக்கும், எடை இழப்புக்கும் வழிவகுக்கும்.
எனவே, பாசிப்பருப்பை ஒரு இரவில் ஊற வைத்து பிறகு மறுநாள் சில பொருட்களை அதில் கலந்து அதை மிக்ஸி ஜாரில் அரைத்தால் பாசிப்பருப்பு அடை தோசை செய்வதற்கான மாவு தயார். சரி வாங்க இப்போது இந்த பதிவில் பாசிப்பருப்பு அடை தோசை செய்வதற்கான பொருட்கள் என்ன, தோசை செய்யும் முறை பற்றி இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: 1 கப் ரவை இருக்கா.. சூப்பரான அடை தோசை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. ரெசிபி இதோ!
பாசிப்பருப்பு அடை தோசை செய்ய தேவையான பொருட்கள் :
பாசிப்பருப்பு - 1 கப்
அரிசி - 1/4 கப்
பச்சை மிளகாய் விழுது - 2 ஸ்பூன்
இஞ்சி - 1
பூண்டு - 4
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லி - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: அட்டகாசமான சுவையில் சத்தான 'இன்ஸ்டன்ட் அடை தோசை'.. ரெசிபி இதோ!
செய்முறை :
பாசிப்பருப்பில் அடை தோசை செய்ய முதலில் எடுத்து வைத்த பாசிப்பருப்பு மற்றும் அரிசியை ஒரு இரவில் ஊற வைத்து, பிறகு மறுநாள் காலை ஊற வைத்த அரிசி மற்றும் பாசிப்பருப்பை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அதனுடன் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள். பிறகு இந்த மாவில் நபொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் மற்றும் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது அடுப்பில் தோசை கல் வைத்து அதில் எண்ணெய் தடவி சூடானதும் கரைத்து வைத்த மாவை ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வேக வைத்து எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான பாசிப்பருப்பு அடை தோசை ரெடி. இந்த தோசைக்கு நீங்கள் தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D