உங்க மெத்தை நாறுதா? நறுமணம் வீசும் வீட்டு 'ஸ்ப்ரே' செய்றது எப்படி?

By Kalai Selvi  |  First Published Jan 24, 2025, 2:32 PM IST

Home Remedies For Mattress Odor : உங்கள் மெத்தையில் வீசும் துர்நாற்றத்தை போக்க வீட்டில் தயாரிக்கப்படும் ஸ்ப்ரேவை கொண்டு நறுமணம் வீச செய்யலாம்.


வீட்டில் இருக்கும் சில பொருட்களை தினமும் சுத்தம் செய்ய முடியாது. அவற்றில் ஒன்றுதான் நாம் தூங்கும் மெத்தை. மெத்தையை சுத்தம் செய்வது மிகவும் கடினமான வேலையாகும். ஏனெனில் நாம் தினமும் அதை பயன்படுத்துவதால் அதில் தூசிகள், அழுக்குகள் தங்கிவிடும். இதனால் அவற்றிலிருந்து ஒருவிதமான துர்நாற்றம் வீச தொடங்கும். இதனால் நம்முடைய தூக்கம் தான் பாதிக்கப்படும்.

ஒரு சில வீடுகளில் மெத்தையில் தான் தின்பண்டங்கள் மற்றும் உணவுகள் சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் போது சில சமயங்களில் உணவுகள் மெத்தையில் விழுவதால், அதனால் அழுகுகள் படிந்து துர்நாற்றம் வீசு தொடங்கும். ஏன் வீட்டிற்கு விருந்தாளிகள் வந்தால் கூட மெத்தையில் இருந்து வரும் துர்நாற்றம் அவர்களை முகம் சுளிக்க வைக்கும். இதனால் சிலர் சுத்தம் செய்வார்கள் இன்னும் சிலரும் சுத்தம் செய்யாமல் அப்படியே வைத்துவிட்டு, புது மெத்தையை வாங்குவார்கள். ஆனால் புது மெத்தையை வாங்குவது எல்லாராலும் சாத்தியமில்லை. இத்தகைய சூழ்நிலையில், வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து சில ஸ்ப்ரேக்களை தயாரித்து அதை மெத்தையில் அடித்தால் துர்நாற்றம் நீங்கி, நறுமணம் வீச தொடங்கும். எனவே, அதை தயாரிப்பது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

Latest Videos

இதையும் படிங்க: ஷேவிங் கிரீம் ஒரு துளி 'இப்படி' யூஸ் பண்ணா அழுக்கு மெத்தையை புதுசு போல மாத்திடும்!!

மெத்தையில் நறுமணம் வீசுவதற்கான ஸ்பிரேக்களை தயாரிப்பது எப்படி?

ஒன்று...

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு, தேயிலை மர எண்ணெய், பேக்கிங் சோடா

தயாரிக்கும் முறை:

இந்த ஸ்ப்ரே தயாரிக்க முதலில் சிறிதளவு பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து அதில் சில துளிகள் தேயிலை மர எண்ணெய் மற்றும் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளுங்கள். பின் அவற்றை நன்கு கலந்து ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி, அதை மெத்தை மீது தெளிக்க வேண்டும். அடுத்ததாக மெத்தையை வெயிலில் காய வைத்தால் சில மணி நேரம் கழித்து மெத்தையிலிருந்து துர்நாற்றம் நீங்கி, நறுமண வீச தொடங்கும். அதுமட்டுமின்றி மெத்தையில் இருக்கும் பாக்டீரியாக்களும் அகன்று விடும்.

இதையும் படிங்க:  மெத்தை வாங்க நினைக்கிறீர்களா? அப்ப முதல்ல இதை தெரிஞ்சுக்கோங்க..இல்லையெனில் நீங்கள் நோய்வாய்ப்படலாம்!

இரண்டு...

தேவையான பொருட்கள்: 

கற்றாழை ஜெல், புதினா எண்ணெய், வெள்ளரி எண்ணெய்

தயாரிக்கும் முறை:

இந்த ஸ்ப்ரே தயாரிக்க முதலில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதில் சிறிதளவு புதினா எண்ணெய், வெள்ளரி எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக குலுக்கிக் கொள்ளுங்கள். இப்போது ஸ்ப்ரே தயார். பிறகு மெத்தையை வெயிலில் வைத்து பின் அதன் மீது தயாரித்த ஸ்பிரேவை தெளிக்க வேண்டும். இப்படி செய்தால் மெத்தையில் துர்நாற்றம் அடிக்காது. அதற்கு பதிலாக புதிய வாசனை வீசும்.

மூன்று...

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை சாறு, வினிகர், பேக்கிங் சோடா

தயாரிக்கும் முறை:

உங்கள் மெத்தையில் வீசும் துர்நாற்றத்தை நீக்கி, நறுமணம் வீச முதலில் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து கொள்ளுங்கள். அடுத்ததாக அதில் 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் வினிகர் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, அதை மெத்தை மீது தெளிக்கவும். இந்த நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை உங்களது மெத்தை மீது தெளிக்கலாம். முக்கியமாக இதை மெத்தை மிதி தெளிக்கும்போது மெத்தையை சூரிய ஒளியில் வைத்து எடுக்க மறக்காதீர்கள்.

click me!