ஆர்வகோளாரில் விண்கல் என நினைத்து காய்ந்த மனித கழிவை குளிர்சாதனபெட்டியில் பாதுகாத்து வந்த காமெடி..!

 
Published : Jan 24, 2018, 10:14 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
ஆர்வகோளாரில் விண்கல் என நினைத்து காய்ந்த மனித கழிவை குளிர்சாதனபெட்டியில் பாதுகாத்து வந்த காமெடி..!

சுருக்கம்

due to misperception people kept the dry toilet in the fridge

மனித கழிவை விண்கல் என எண்ணி குளிர்சாதன பெட்டியில் வைத்து அழகு பார்த்த சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது.

டெல்லியில் உள்ள  குருகிராம் அடுத்த பாசில்பூர்  பாடிலி  கிராமத்தில் வானத்திலிருந்து  8 கிலோ எடை கொண்ட பொருள் ஒன்று அங்குள்ள வயல் வெளியில் விழுந்துள்ளது. வேகமாக விழுந்த அழுத்தத்தில், , விழுந்த இடத்தில் ஒரு அடி பள்ளம்  கூட ஏற்பட்டு உள்ளது

இதனை அறிந்த கிராம மக்கள் ஏதோ அதிசய கல் விழுந்துள்ளது என நினைத்து  ஆர்வகோளாரில் தங்கள்  வீட்டிற்கே கொண்டு வந்து  குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ளனர்.

இந்த தகவல்  தீயா பரவ,வானிலை ஆய்வு மைய  அதிகாரிகளும், விஞ்ஞானிகளும் அதன் மாதிரிகளை  சேகரித்து ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர்  தான் தெரியவந்தது வானிலிருந்து விழுந்தது விண்கல் அல்ல....காய்ந்த நிலையில் இருந்த மனித கழிவு விமானத்தில் இருந்து விழுந்துள்ளது  என்று..

பின்னர் சொல்லவா வேண்டும்...உண்மையை அறிந்த கிராம மக்கள்  ஓடி சென்று தங்கள் வீட்டு குளிர்சாதனபெட்டியில் வைத்திருந்த விண்கல்(மனித கழிவு) தூக்கி எறிந்தனர் .

இந்த சம்பவம் அறிந்த மற்றவர்கள் ஒருவரை  ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மாதவிடாய் நேரத்தில் இந்த உணவுகளை சாப்பிட மறக்காதீங்க
வெற்றியை தாமதமாக்கும் 5 விஷயங்கள் - சாணக்கியர் அறிவுரை