இந்த விஷயத்திலே சீனாவை முந்திருச்சாம் இந்தியா !! எதுல தெரியுமா ?

 
Published : Jan 23, 2018, 04:25 PM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
இந்த விஷயத்திலே சீனாவை முந்திருச்சாம் இந்தியா !! எதுல தெரியுமா ?

சுருக்கம்

India beat china in two wheeler sales

இரு சக்கர வாகன விற்பனையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவில் விற்பனையான இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 77 லட்சம் என்று இருந்த நிலையில், சீனாவில் 1 கோடியே 68 லட்சம் இரு சக்கர வாகனங்கள்தான் விற்பனையாகியுள்ளன.

உலகிலேயே மக்கள் தொகையில் தற்போது வரை சீனாதான் முதல் இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் மக்கள் தொகிப் பெருக்கத்தில் சீனாவுக்கு இணையாக இந்தியாவும் கடும் போட்டியிட்டு வருகிறது என்றே சொல்லலாம்.

அடுத்த ஒரு சில ஆண்டுகளில் மக்கள் தொகையில் நிச்சயமாக சீனாவை மிஞ்சி விடும் அளவுக்கு இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. அதே நேரத்தில் இரு சக்ர வாகன விற்பளையில் சீனாவை மிஞ்சி இந்தியா சரித்திரம் படைத்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனையான இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 1.77 கோடி. சீனாவில் விற்பனையானதோ 1.68 கோடியாகும்.கடந்த 5 ஆண்டுகளாக இத்துறை அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது.

கிராமப்புற பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதால் இரு சவக்கர வாகனகளின் விற்பனையும் வேகுவாக அதிகரித்துள்ளது.  பருவ மழை பொய்துப் போள் விவசாயம் குறைந்து விட்டாலும், கிராமப் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது.

நகர்ப் புறங்களில் மக்களின் செலவிடும் தன்மை அதிகரித்துள்ளதாலும்,  அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, வாகன கடன் எளிதாக கிடைப்பதாலும் இந்த வளர்ச்சி சாத்தியமாகியுள்ளது.

இரு சக்கர வாகனங்களின் கண்காட்சி, தனியார் நிதி நிறுவனங்கள் நடத்தும் லோன் மேளா  போன்ற பல்வேறு காரணங்களால்  பைக் விற்பளை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இரு சக்கர வாகன உற்பத்தியில் முன்னணியில் உள்ள ஹோண்டா, பஜாஜ், இந்தியன், கவாஸகி, டிபிஎஸ், அப்ரிலியா ஆகிய நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை விற்பனை பல புதுப்புது உக்திகளை கையாண்டு வருவதால் இரு சக்கர வாகன விற்பனை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது

தற்போது இரு சக்கர வாகனங்களுக்கு பொதுமக்களிடையே பெருகிவரும் ஆதரவை கணக்கிட்டு அடுத்த சில ஆண்டுகளுக்கு இத்துறை 9 சதவீதம் முதல் 11 சதவீத அளவுக்கு வளர்ச்சி பெறும் என்கின்றனர் உல்லுநர்கள்.

எது எப்படியோ மக்கள் தொகையில் இந்தியா சீனாவை மிஞ்சிவிடும் என்று அனைவருமே எதிர்பார்த்திருந்த நிலையில், தற்போது இரு சக்கர வாகனங்கள் விற்பனையில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்கால சரும வறட்சிக்கு முற்றுப்புள்ளி
குழந்தைகளுக்கு சிறுவயதில் கட்டாயம் சொல்லித் தர வேண்டியவை - சாணக்கியர்