தேநீர் அருந்தியதும் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்..? அப்போது உங்களுக்காக தான் இந்த பதிவு..!!

By Narendran S  |  First Published Nov 18, 2022, 11:30 PM IST

நம் நாட்டில் உள்ளவர்கள் பலரும் சோறு சாப்பிடாமல் கூட இருந்துவிடுவார்கள், ஆனால் நாளொன்றுக்கு ஒருமுறைக் கூடி டீ குடிக்காமல் அவர்களால் உயிர்வாழ முடியாது. பலருக்கும் மிகவும் விருப்பமுள்ள இந்த தேநீர் குறித்து அவசியமான தகவல்களை தெரிந்துகொள்வோம்.


மற்ற நாடுகளில் இனிப்பு சேர்க்காமல் வெறும் கொதிக்கவைத்த தண்ணீரில் டீ தூள் சேர்த்து மட்டுமே அருந்துவார்கள். ஆனால் இந்தியாவில் மட்டுமே கொதிக்கவைத்த டீ கொட்டைவடியலுடன் பால் மற்றும் இனிப்பு சேர்த்து குடிப்போம். அதிலும் அவரவர் வசதிக்கு ஏற்ப இஞ்சி அல்லது ஏலக்காய் அல்லது கிராம்பு அல்லது சுக்கு சேர்த்து கொஞ்சம் காரத்தன்மையுடன் குடிப்போம். இப்படியோரு தேநீர் அருந்தும் பாணி, இந்தியாவில் மட்டுமே பயன்பாட்டிலுள்ளது. ஒருவேளை இது மற்ற நாடுகளில் இருக்குமானால், அது இந்தியாவை பார்த்து அவர்கள் பின்பற்றியே செய்முறையாக தான் இருக்க வேண்டும். ஒருகாலத்தில் தேநீர் என்பது நாளொன்றுக்கு ஒருமுறை மட்டுமே குடிக்கும் பானமாக இருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை, தோன்றும் போதெல்லாம் டீ போட்டு குடிப்பவர்கள் பலர் உள்ளனர். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டும் டீ குடிப்பது நல்லது தான். ஆனால் ஒருமுறை பலமுறை பழக்கமாகும் போது அதில் சிக்கல் எழுவதாக மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.

டீ குடித்தவுடன் தண்ணீர் குடிக்கும் பழக்கம்

Latest Videos

undefined

சிலர் டீ குடித்த உடனேயே தண்ணீர் குடிப்பார்கள். தேநீர் அருந்திய பின் தண்ணீர் குடிப்பது தேநீரை விட அதிக தீங்கு விளைவிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தேநீரில் காஃபின் உள்ளது. அதனால் தான் தேநீர் குடித்ததும் பலருக்கும் தாகம் எடுக்கும். ஒரு கப் டீயில் 50 மி.கி காஃபின் உள்ளது. அதிகமாக டீ குடிப்பதால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும். இது தாகத்தை அதிகரிக்கிறது.

இதையும் படிங்க: பாதாம் தோலில் இப்படி ஒரு நன்மை இருக்கா: முடிக்கும் முகத்திற்கும் இப்படி யூஸ் பண்ணுங்க!

பற்களில் பிரச்னை

சூடான உணவைத் தொடர்ந்து குளிர்ந்த உணவை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அது நம் வாய், தொண்டை, உணவுக்குழாய்யை பாதிக்கிறது. சூடான தேநீர் அருந்திய பிறகு தண்ணீர் குடிப்பது உங்கள் பற்களை சேதப்படுத்தும். வாயின் வெப்பநிலையில் ஏற்படக்கூடிய இந்த திடீர் மாற்றத்தால் பல்லின் நரம்புகளை சேதமடைந்து, பற்களில் கூச்சம் உண்டாகும்.

அல்சர்

தேநீர் அருந்திய உடனேயே தண்ணீர் குடிப்பதால் அல்சர் ஏற்படும் அபாயம் அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால் சிலருக்கு டீ குடித்தவுடன் வயிற்றில் வாயு வெளியேறும். இதை குறைக்க, அதிக தண்ணீர் குடிக்கவும். ஆனால் இப்படி செய்வதால் வயிற்றில் புண் தான் ஏற்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை அளிக்கும் கம்பு சாதம்! செய்வது எப்படி?

இரத்தப்போக்கு

டீ குடித்துவிட்டு தண்ணீர் குடிப்பதாலும் மூக்கில் ரத்தக்கசிவு ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர். நமது உடல் குளிர் மற்றும் வெப்பம் இரண்டையும் ஒரே நேரத்தில் பொறுத்துக்கொள்ளாது. வானிலைக்கு தகுந்தவாறு மாறுவதற்கு சற்று நேரம் எடுக்கும். கோடைக் காலத்தில் தண்ணீர் குடித்துவிட்டு டீ குடித்தால் மூல்லில் ரத்தப்போக்கு பிரச்னை ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.

தொண்டை வலி

சூடான தேநீருக்குப் பிறகு குளிர்ந்த நீரை குடித்தால் தொண்டை வலி, இருமல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே எந்த சூழ்நிலையிலும் டீ குடித்த உடனே தண்ணீர் குடிக்க வேண்டாம். டீ குடித்து அரை மணி நேரம் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் உங்களுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் வராது.

டீ குடித்துவிட்டு தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக, டீ குடிப்பதற்கு முன் தண்ணீர் குடியுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. தேநீர் பலருக்கு இரைப்பை பிரச்சனைகளை மோசமாக்கும். தேநீர் அருந்தும் முன் தண்ணீர் குடிப்பதால் இரைப்பை பிரச்சனைகள் வருவதை குறைக்கலாம். முதலில் தண்ணீர் குடித்துவிட்டு, பிறகு டீ குடித்தால் அசிடிட்டி, கேன்சர் மற்றும் அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதைக் குறைக்கலாம் என்று பல தகவல்கள் தெரிவிக்கின்றன. வயிற்று அமிலத்தை நீர்த்துப்போகச் செய்ய தண்ணீர் உதவுகிறது.

click me!