"மசால் தோசை, பில்டர் காபி" முற்றிலும் "ப்ரீ"...! எந்த ஓட்டலில் தெரியுமா..?

First Published May 11, 2018, 7:56 PM IST
Highlights
dosai and coffee is free in bangalore hotel for election


இலவச டிபன் வேண்டுமா?

கர்நாடகத்தில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு பெங்களூரு ஓட்டலின் புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. 

நாளை 12 ஆம் தேதி கர்னாடக மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. நேற்றுடன் காங்கிரஸ் மற்றும் பாஜக வின்  சூறாவளி பிரச்சாரம் சூடு பிடித்து நேற்றோடு முடிந்து விட்டது.

இந்நிலையில், நாள் தேர்தல் என்பதால், புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு ஹோட்டல் சுவாரஸ்யமான அறிவிப்பை வெளியிட்டு புதிய வாக்காளர்களை ஊக்கப்படுத்தி உள்ளது

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இலவசமாக டிபன் வழங்கப்படுமென ஓட்டல் ஒன்று கூறியுள்ளது. அந்த மாநிலத்தின் பெங்களூருவில் உள்ள நிசார்கா என்ற உணவகமே இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

புதிய வாக்காளர்கள், ஓட்டு போட்ட பின்னர், விரலில் மையுடன் வந்தால், அவர்களுக்கு இலவசமாக மசால் தோசை, பில்டர் காபி வழங்கப்படுமென ஓட்டல் நிர்வாகம் கூறியுள்ளது. வழக்கமாக மந்தமான வாக்குப்பதிவை கொண்டிருக்கும் பெங்களூர் நகரில் மசால் தோசை அறிவிப்பு வாக்கு பதிவை அதிகரிக்குமா என்பது சனிக்கிழமை மாலை தெரியவரும். அந்த மாநிலத்தில் முதல் முறையாக 15 லட்சத்து 20 ஆயிரம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பால் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று உள்ளது இந்த ஓட்டல்.

click me!