இரவு நேரத்தில் மறந்து கூட இந்த உணவு பொருட்களை சாப்பிடாதீங்க..!

By ezhil mozhiFirst Published Apr 1, 2020, 6:34 PM IST
Highlights

முதலில் தயிரை இரவு நேரத்தில் சாப்பிட்டால் உடலில் வெப்பநிலை அதிகமாகி அஜீரண கோளாறுகள் ஏற்படும். அதேபோல் சாப்பிட்ட உடனே சூடான நீர் குடிப்பது நல்லதல்ல. இரவு நேரத்திலும் சூடான நீரை குடிக்க கூடாது.

இரவு நேரத்தில் மறந்து கூட இந்த உணவு பொருட்களை சாப்பிடாதீங்க..! 

இயற்கையான உணவு என்ற ஒன்று இன்று இல்லாமல்... அனைத்தும் கலப்பிடம் என்றாகி விட்டது. இருந்தாலும் நம் ஆரோக்கியம் பேணி காக்க தினமும் ஒரு சில பழ வகைகளை எடுத்துக்கொள்ளலாம். மேலும் எந்த நேரத்தில் எந்த உணவு சாப்பிடுவது என்றில்லாமல், கன்னத்தில் பட்டதெல்லாம் சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் ஏராளம்.

எனவே, முறையான உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிக்கவில்லை என்றாலும் இரவு நேரத்தில் ஒரு சிலதை எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பார்க்கலாம் 

முதலில் தயிரை இரவு நேரத்தில் சாப்பிட்டால் உடலில் வெப்பநிலை அதிகமாகி அஜீரண கோளாறுகள் ஏற்படும். அதேபோல் சாப்பிட்ட உடனே சூடான நீர் குடிப்பது நல்லதல்ல. இரவு நேரத்திலும் சூடான நீரை குடிக்க கூடாது.

இரவு நேரத்தில் பலருக்கும் பால் குடிக்கும் பழக்கம் இருக்கும். வெறும் பாலை குடிக்காமல் சிறிது மஞ்சள் பொடி கலந்து குடித்தால் பாக்டீரியாக்களுக்கு எதிராக மட்டுமல்லாமல் குறட்டை தொல்லையிலிருந்து விடுபடலாம். இரவு நேரங்களில் சாலட்கள் போன்ற உணவுகளை சாப்பிட்டால் உடலில் வாயுவை அதிகரிக்கும். எனவே இதனை தவிர்ப்பது நல்லது.

அதே போன்று, டயட்டில் இருப்பவர்கள் இரவு நேரத்தில் சப்பாத்தி எடுத்துக்கொள்ளலாம். அதே போன்று இரவு 10 மணிக்கு பிறகு எதையும் சாப்பிட எடுத்துகொள்ள வேண்டாம். அது ஜீரண மண்டலத்தை சரிவர இயங்க வைக்காது.

click me!