எங்கள மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரியுதா..? கொதித்தெழுந்த இயக்குனர் பேரரரசு..!

thenmozhi g   | Asianet News
Published : Apr 01, 2020, 05:08 PM ISTUpdated : Apr 01, 2020, 05:45 PM IST
எங்கள மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரியுதா..? கொதித்தெழுந்த இயக்குனர் பேரரரசு..!

சுருக்கம்

பல்லாயிர கோடிகளில் புரளும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் இதுவரை பெரிசா ஒன்னும் வாய் திறக்கவே இல்லை. ஒருத்தரும் நிதியுதவி வழங்க முன்வரவில்லை.இது குறித்த பல விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் பார்க்கமுடிந்தது. இதை  பார்த்தும் யாரும் நிதியுதவி அறிவிப்பு வெளியிடவில்லை.

எங்கள மட்டும்தான் உங்கள் கண்ணுக்கு தெரியுதா..? கொதித்தெழுந்த இயக்குனர் பேரரரசு..!  

மக்கள் தங்களால் இயன்ற நிதியுதவியை வழங்கலாம் என பிரதமர் தெரிவித்து இருந்தார். இக்கட்டான இந்த போர்க்கால சூழ்நிலையில் நாட்டுக்கு இது மிக அவசியமானதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன் படி, பல நன்கொடைவள்ளல்கள் கோடிகளில் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளனர். அதில் நடிகர்  அக்ஷய்,பிரபாஸ்,ரிலையன்ஸ் குழுமம், டிவிஎஸ், டாடா என பெரும்  நிறுவனங்களும் கோடிகளில் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பல்லாயிர கோடிகளில் புரளும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் இதுவரை பெரிசா ஒன்னும் வாய் திறக்கவே இல்லை. ஒருத்தரும் நிதியுதவி வழங்க முன்வரவில்லை.இது குறித்த பல விமர்சனங்கள் சமூக வலைத்தளத்தில் பார்க்கமுடிந்தது. இதை  பார்த்தும் யாரும் நிதியுதவி அறிவிப்பு வெளியிடவில்லை.

இந்த ஒரு தருணத்தில், திருப்பாச்சி, தருமபுரி, சிவகாசி உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர்  பேரரசு தனது சமூக வலைத்தளபக்கத்தில், அரசியல் வாதிகளுக்கு சரமாரி கேள்வி எழுப்பி பதிவு செய்துள்ளார்

அதில்,

 "ஓட்டுக்காக 50 கோடி, 100 கோடி என்று பணம் கொடுக்க தயாராக இருக்கும் பல அரசியல்வாதிகள் கொரோனா நிதியாக எவ்வளவு கொடுத்தார்கள்? எந்த நடிகர் எவ்வளவு கொடுத்தார் என்பதில்தான் இந்த மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் ! நடிகர்கள் கொடுக்கும் பணம் அவர்கள் உழைத்து சம்பாதித்தது. மக்களின் வரிப் பணத்தையும் லஞ்சம் , ஊழலின் மூலம் சம்பாதித்து கொழுத்த அரசியல்வாதிகள் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதைத்தான் மக்கள் கவனிக்க வேண்டும்!" என குறிப்பிட்டு உள்ளார்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மன அழுத்தம் குறைக்கும் மந்திர பானங்கள்
நேரத்தை கையாள சரியான வழி இதுதான் - சாணக்கியர் அட்வைஸ்