கோவிலுக்கு கிளம்பும் போது இந்த தவறை பண்ணாதீங்க...!

By ezhil mozhiFirst Published Apr 26, 2019, 6:49 PM IST
Highlights

நாம் எப்போது கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

கோவிலுக்கு கிளம்பும் போது இந்த தவறை பண்ணாதீங்க...! 

நாம் எப்போது கோவிலுக்கு சென்று வழிபட்டாலும் சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

ஆலய நுழைவாயிலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்ல வேண்டும். தலையில் நீரைத் தெளிக்க வேண்டாம்.முதல்நாள் இரவே பரிகார ஸ்தலத்திற்கு சென்று விடுவது நல்லது.

போகும்போதோ வரும்போதோ உறவினர் வீடு மற்றும் பிற ஸ்தலங்களுக்கு செல்ல வேண்டாம். புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்பும் பின்பும் அசைவ உணவு, மது இவற்றை தவிர்க்க வேண்டும். மற்ற விஷயங்களிலும் சரியாக கட்டுப்பாடு இருக்க வேண்டும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்வது நல்லது அதற்காக பிரார்த்தனை என்றால் நீண்ட நாட்கள் தள்ளிப் போடக்கூடாது. 

பெண்கள் வீட்டுக்கு விலக்காக இருந்தால் ஒரு வாரத்திற்கு பின்பு கோவிலுக்கு செல்வது நல்லது. யாரிடமும் கடன் வாங்கி கோவிலுக்கு செல்ல கூடாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று சொல்லி வாங்காதீர். கடவுளை வழிபட நேரமானால் புறப்படுவதற்கு முன்பு காபி, டீ, ஜூஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

முக்கிய பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை பிறரிடம் சொல்லாமல் இருப்பது நல்லது. எல்லா ஆலயங்களுக்கும் சம்பந்தாசம்பந்தமின்றி சென்று வருவது பயனற்றது. பொழுதுபோக்கிற்காக கோவிலுக்கு செல்ல கூடாது. 

பூஜைக்கு அமாவாசை,பவுர்ணமி, தங்கள் பிறந்த நாள், சித்திரை ௧, ஜனவரி 1 போன்றவை உகந்தவை. மாலை நேர பூஜைக்கு செல்லும்போது காலை அணிந்த அதே உடையை அணிந்து செல்லக்கூடாது.

ஆலயத்திற்குள் செல்லும்போது யாரிடமும் பேசக்கூடாது செல்போனையும் பயன்படுத்துதல் கூடாது முடிந்தவரை புத்தாடை அணிந்து செல்வது நல்லது.

click me!