வீட்டில் "லட்சுமி கடாட்சம்" பெருக வேண்டுமா..? இதை செய்ய மறக்காதீங்க..!

Asianet News Tamil  
Published : Jun 02, 2018, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
வீட்டில் "லட்சுமி கடாட்சம்" பெருக வேண்டுமா..? இதை செய்ய மறக்காதீங்க..!

சுருக்கம்

donr forget to do this to increase money in our home

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டுமா..? இதை செய்ய மறக்காதீங்க..!

நம் வீட்டில் தினமும் மேற்கொள்ளப்படும் முறைகளை வைத்தே ஸ்ரீ தேவி குடி  இருப்பாளா..? அல்லது மூதேவி குடி இருப்பாளா என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

அவ்வாறு ஸ்ரீதேவி குடி இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்  வாங்க....

செய்யக்கூடியவை

தினசரி எழுந்ததும் முதலில் நமது உள்ளங்கைகள் அல்லது குழந்தையின் முகம் அல்லது சாமி படங்களை பார்க்கலாம்.

வீட்டில் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒருமுறையாவது சாமி கும்பிட வேண்டும்.

வாரத்திற்கு இருமுறையாவது வீட்டைக் கழுவி, அப்படியே பூஜை அறையையும் கழுவி, சுத்தம் செய்ய வேண்டும்.

பூஜை அறையில் சாமி படங்களுக்கு தினந்தோறும் பூக்களை படைக்க வேண்டும்.

தினந்தோறும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நன்மையைத் தரும்.

பூஜை அறையில் ஏற்றப்படும் தீபங்களை நாமாக அணைக்கக்கூடாது. அது தானாக முழுவதும் எரிந்து அணைதல் நல்லது.

வீட்டின் கதவு மற்றும் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால், தீய சக்திகள் வீட்டிற்குள் வராது என்பது ஐதீகம்.

பூஜை முடிந்ததும் பெண்கள் நெற்றியிலும், மாங்கல்யத்திலும் குங்குமம் கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும்.

வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். அந்தச் சங்கை நாள்தோறும் பயன்படுத்த வேண்டும்.

வீட்டில் துளசி மற்றும் வேப்ப மரம் வளர்ப்பது நல்லது. தினந்தோறும் அதன் அருகிலாவது நாம் சென்று வருவது சிறப்பு.

பூஜை அறையிலோ, வீட்டின் முற்றத்திலோ தெய்வப் படங்களை கிழக்கு நோக்கி வைப்பது நல்லது.

சாமிக்கு இலையில் வைத்துத்தான் உணவு மற்றும் பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும்.

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!
10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!