அப்பாவுக்கும் மகளுக்கும் இடையே இருக்கும் பாசம் அற்புதமானது. கல்யாணம் ஆன பின்னரும் தனது இஷ்டம் போல் திரியும் மனிதனும், தனக்கு ஒரு பெண் பிள்ளை பிறந்துவிட்டாள் சாந்த குணமாக மாறிவிடுவார்.
யாருடைய பேச்சையும் கேட்காதவன் தன் மகளின் ஒவ்வொரு சிரிப்புக்கும் மலர்கிறான். மகள் பிறந்தவுடன் மீண்டும் எனது தாய் பிறந்தாள் என்று கொண்டாடும் அப்பாக்கள் ஏராளம். அப்படிப்பட்ட மகளுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு இன்னொருவர் கையில் கொடுப்பது அப்பாக்களுக்கு மிகுந்த வேதனைதான்.
தன வீட்டில் இஷ்டம் போல், காலில் சலங்கை கட்டிக் கொண்டு, ஆடிப்பாடி மகிழ்ந்து இருப்பாள். சின்னச் சின்ன விஷயத்திற்கும் அழுதுகொண்டே வளர்ந்த தன் மகள் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்குப் பெரியவளாகிவிட்டதை நம்ப முடியாமல் தன் மகளுக்கு மணமகனை தேடும் தந்தையை பார்த்திருகிறோம்.
உடலில் இந்த அறிகுறிகள் இருந்தால் அசால்டாக இருக்காதீங்க..! அது கல்லீரல் புற்றுநோயாக இருக்கலாம்..!!
அப்பாவின் இந்த உணர்வுப்பூர்வமான தன்மை பெரும்பாலானோருக்கு தெரியாமல் போயிருக்கலாம். ஆனால் அப்பாவை புரிந்து கொண்ட பலருக்கு தெரியும் அப்பாவிற்குள் ஒரு மனம் இருக்கிறது, அவரும் உணர்ச்சி வசப்படக் கூடியவர். ஆனால் அவரால் பெண்களை போல் எல்லாவற்றையும் சொல்ல முடியாது. வெளிப்படுத்த முடியாது. அதே போல் மகளை திருமணம் செய்து கொடுத்துவிட்டு மருமகனின் கையைப் பிடித்துக் கொண்டு தந்தை கதறி அழும் வீடியோ மனதை உருக்குவதாக இருக்கிறது.
திருமணம் முடிந்தவுடன் மருமகனின் கையை பிடித்துக் கொண்டு அப்பெண்ணின் தந்தை அழுது கொண்டே, ''என்றாவது ஒரு நாள் உன் மனதில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், என் மகளை நேசிப்பதை நிறுத்தினால், அவளை புண்படுத்தாதே, அவளை என்னிடம் திரும்பக் கொடுத்துவிடு. அவளை ஒன்றும் செய்யக் கூடாது'' என்று கெஞ்சி கேட்கிறார். ''அதுபோல் நடக்காது'' என்று மருமகன் மாமனாருக்கு ஆறுதல் கூறுகிறார்.
தினமும் காலை இதையெல்லாம் ஃபாலோ பண்ணா போதும்.. திருமண வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்..
என் அருமை மகள் இப்போது உன்னுடையவள் என்று மாமனார் தனது மகளின் கையை மருமகன் கையில் கொடுத்து உணர்ச்சி வசப்படுகிறார். இந்த நேரத்தில் மருமகன் மகளும் உணர்ச்சிவசப்பட, மாமனார் மருமகன் ஒருவரையொருவர் இறுகக் கட்டிப்பிடித்து உணர்ச்சிவசப்படுகின்றனர். திருமணத்திற்கு வந்திருந்த விருந்தினர்களும் மணப்பெண்ணின் அழுகையைப் பார்த்து அவர்களும் நெகிழ்ச்சி அடைந்து அழுகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ‘உனக்கு வேண்டாம் என்றால் என் மகளைத் திருப்பிக் கொடு’ என்று தந்தை கூறியதைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்டதாக பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இப்படியொரு தந்தை கிடைத்தது பாக்கியம் என்று ஒருவரும், மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் ஒவ்வொரு தந்தையும் தன் மருமகனிடம் இதை கூற வேண்டும் என மற்றொருவரும் பதிவிட்டுள்ளனர்.