Miss India Finalist முதல் மத்திய அமைச்சர் வரை : ஸ்மிருதி இரானி பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள்

By Ramya s  |  First Published Jul 28, 2023, 3:05 PM IST

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பற்றி அதிகம் அறியப்படாத தகவல்களை பார்க்கலாம்.


நடிகையாக இருந்து அரசியல்வாதியாக மாறிய ஸ்மிருதி இரானி தனது தொழில் வாழ்க்கையில் நீண்ட தூரம் வந்துள்ளார். ஒரு மாடலாக தனது கெரியரை தொடங்கி பின்னர் தனது நடிப்புத் திறமையால் பலரின் இதயங்களை வென்றார், பின்னர் அரசியல்வாதியானார். அவர் 'லால் சலாம்' என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார் என்பது பலருக்குத் தெரியாது. பல ஆண்டுகளாக அவர் தனது வெற்றிக் கதைகளுக்கும் சில சர்ச்சைகளுக்கும் தலைப்புச் செய்தியாக இருந்தார். ஸ்மிருதி இரானி குறித்து அதிகம் அறியப்படாத தகவல்களை பார்க்கலாம்.

ஸ்மிருதி இரானி, தனது கனவுகளை நிறைவேற்றுவதற்காக மிக இளம் வயதிலேயே மும்பைக்கு வந்தார். பல போராட்டங்களுக்குப் பிறகு மாடலிங் உலகில் நுழைந்தார். ஸ்மிருதி மிஸ் இந்தியா 1998-ல் போட்டியிட்டு இறுதிப் போட்டியாளர்களில் ஒருவரானார். பின்னர் சில மாடலிங் பிரச்சாரங்களை செய்தார். பல கடின உழைப்புக்குப் பிறகு, ஸ்மிருதி நடிப்புத் தேர்வில் வெற்றிபெற்று ஏக்தா கபூரின் Kyunki Saas Bhi Kabhi Bahu Thi என்ற தொலைக்காட்சி தொடரின் நாயகி ஆனார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் துளசி விராணியாக நடித்த அவரது நடிப்புத் திறமையை பலரையும் ஈர்த்தது. Kya Hadsaa Kya Haqeeqat, Ek Thi Nyaaka போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஸ்மிரிதி இரானி நடித்திருந்தார்.

Tap to resize

Latest Videos

2001 முதல் 2005 வரை இந்தியத் தொலைக்காட்சி அகாடமியால் சிறந்த நடிகைக்கான விருதை அவர் பெற்றார் என்பது பலருக்குத் தெரியாது. Kyunki Saas Bhi Kabhi Bahu Thi  தொடரில் துளசி என்ற கதாப்பாத்திரத்திற்காக 2000களில் அவர் பல விருதுகளைப் பெற்றார்.

ஸ்மிருதி இரானியும் ஏக்தா கபூரும் கியுங்கி Kyunki Saas Bhi Kabhi Bahu Thi தொடரில் இருந்தே மிக நெருக்கமான உறவைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஸ்மிருதி நிகழ்ச்சியை விட்டு வெளியேறியபோது, அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூட கூறப்பட்டது. பல வதந்திகளால் ஸ்மிரிதி - ஏக்தா கபூ இருவரும் அந்த நேரத்தில் பேசு பொருளாக மாறி அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தனர். இருப்பினும், அவர்கள் தொடர்ந்து சிறந்த நண்பர்களாக இருந்தனர்.

2003-ல் பாஜகவில் இணைந்த ஸ்மிருதி இரானி, தனக்கென ஒரு பெயரைப் பெற்றார். 2004-ல் அவர் மகாராஷ்டிரா இளைஞர் பிரிவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இருப்பினும், அரசியல் வாழ்க்கையில் ஸ்மிருதியை பற்றி பலருக்கு தெரியாது. 2019 இல் பாராளுமன்ற உறுப்பினரானபோது ஸ்மிருதிக்கு குறிப்பிடத்தக்க வெற்றி கிடைத்தது. ராகுல் காந்தியை எதிர்த்து ஸ்மிருதி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இளம் அமைச்சரவை உறுப்பினர்களில் ஸ்மிருதியும் ஒருவர். ஸ்மிருதியின் தலைமைப் பண்புகளுக்காக பல்வேறு தரப்பினரும் அவரை விரும்புகின்றனர்.

அரசியல்வாதியாக மாறிய நடிகை, பார்சி தொழிலதிபர் ஜூபின் இரானியை 2001 இல் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜோர் மற்றும் ஜோயிஷ் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். ஜூபினின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் ஷனெல்லும் அவர்களுடன் தங்கினார். ஷனெல்லே சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் அரசியல் மற்றும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்மிருதி இரானி 2021ல் தனது முதல் புத்தகத்தை எழுதினார். அவரது முதல் புத்தகமான ‘லால் சலாம்’ பார்வையாளர்களிடமிருந்து நிறைய பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றது. ஏப்ரல் 2010 இல் தண்டேவாடாவில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதல் மற்றும் மத்திய போலீஸ் படைகளின் பங்கை அடிப்படையாகக் கொண்டு புத்தகம் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

IIT, IIM கல்வி இல்லை.. ரூ.12,000 கோடி Turnover! இந்தியாவின் பணக்கார கோழி விவசாயிகளின் வெற்றிக்கதை..

click me!