மர்மங்கள் நிறைந்திருக்கும் கதவுகள்;  பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்று வரை திறக்கப்படவில்லை...!!

Published : Jul 27, 2023, 09:47 PM ISTUpdated : Jul 27, 2023, 09:51 PM IST
மர்மங்கள் நிறைந்திருக்கும் கதவுகள்;  பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்று வரை திறக்கப்படவில்லை...!!

சுருக்கம்

மர்மமான பூட்டிய கதவுகளை விட இந்த உலகில் சில விஷயங்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை.  தடைசெய்யப்பட்ட இடங்களை ஆராய விரும்புவது மனித இயல்பு. இருப்பினும், இந்த மர்மங்களில் சில தீர்க்கப்படாமல் விடப்படுகின்றன.  கீழே, உலகின் மிகவும் கவர்ச்சிகரமான மற்றும் மர்மமான பூட்டிய கதவுகள் குறித்து இங்கு பார்ப்போம்.

உலகில் பலவிதமான மர்மங்கள் உள்ளன. இப்போது வரை அவற்றிற்கு தீர்வு கிடைக்கவில்லை. அவற்றில் ஒன்று தான் மர்ம கதவுகள். பல நூற்றாண்டுகள் ஆகியும் அவைகள் திறக்கப்படாத நிலையில் உள்ளது. மேலும்  சில காரணங்களால் அவை சீல் வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. அந்த வகையில், உலகில் மர்மமாக மூடப்பட்டுள்ள பத்மநாபசுவாமி கோவிலின் ரகசிய கதவு, தாஜ்மஹாலின் மூடிய அறைகள் மற்றும் பான்ஃப் ஸ்பிரிங்ஸ் ஹோட்டலின் அறை எண் 873 கதவுகள் குறித்தும், இந்த கதவின் பின்னால் உள்ள மர்மங்கள் என்ன? என்பதை குறித்தும் இங்கே பார்க்கலாம்..

பத்மநாபசுவாமி கோவில் (Padmanabha Swamy Temple)
இந்த கோவில் இந்தியாவில் 6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. மேலும் இந்த கோயிலில் இருக்கும் சில ரகசிய அறைகளை திறந்தால் அங்கு  மிக விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் நிறைந்து இருக்கும். அவற்றின் மதிப்பு பல ஆயிரம் கோடிகள் ஆகும். 1729 முதல் திருவிதாங்கூர் அரச மாளிகையால் இந்த கோயில் நிர்வகிக்கப்பட்டது. அவர்கள் கோவிலின் கருவூலத்தைத் தவறாக நிர்வகிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அக்கோயிலை 2011 முதல் அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. இதனை அடுத்து, இந்த கோயிலில் சீல் வைக்கப்பட்ட 6 ரகசிய அறையில், 5 அறை திறக்கப்பட்டது. இவற்றில் பல பொக்கிஷங்கள் நிரம்பியிருந்தத்காக கூறப்படுகிறது. மேலும் ஒரு கதவு மட்டும் திறக்கப்படவில்லை. ஏனெனில், அந்த அறை கடல் மட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுவதால், அறை திறக்கப்பட்டால் அழிவுகள் வரும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பிளாஸ்டிக் இல்லாத, ஜீரோ வேஸ்ட் திருமணம்.. எப்படி சாத்தியமானது?

பான்ஃப் ஸ்பிரிங்க் ஹோட்டல் (Banff Springs Hotel)
இந்த ஹோட்டல் கனடா நாட்டின் அல்பர்ட்டாவில் உள்ளது. மேலும் இந்த ஹோட்டலின் அறை எண் 873 எப்போதும் மூடப்பட்டே இருக்கும். இந்த ஹோட்டலில் 872 அறைக்கு பின், 874 என்ற எண் கொண்ட அறை தான் இருக்கும். மேலும் 873 எண் கொண்ட அறை சுவர் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது.

இந்த அறை குறித்த ஒரு மர்ம கதையும் உண்டு. அதாவது, பல ஆண்டுகளுக்கு முன்பு விடுமுறைக்கு வந்தது ஒரு குடும்பம். அந்த அறையில் அவர்கள் தங்கினர். நள்ளிரவில், அறையில் இருக்கும் ஏதோ ஒறு மர்மம் கணவனை தாக்கியது. அதனால் அவர் பைத்தியமாகி தனது மனைவி மற்றும் மகளை கொன்று விட்டார். இச்சம்ப வீட்டிற்கு பிறகு மீண்டும் அந்த அறை புதுப்பிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்டது. இருந்த போதிலும் அந்த அறையில் தங்க வந்தவர்களுக்கு சில அமானுஷ்யமான விஷயங்கள் நடப்பதாக கூறினர். இதனால் அந்த அறை முற்றிலுமாக மூடப்பட்டது.
இன்று வரை 873 எண் கொண்ட அந்த அறை மட்டும் திறக்கப்படுவது இல்லை.

இதையும் படிங்க: ” அண்டர்டேக்கர் இதற்கு பெருமைப்படணும்” வைரலாகும் Pre-wedding Shoot வீடியோ

தாஜ்மஹால்
தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாகும். இதனை பார்க்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது உண்டு. பளிங்கு கற்களால் கட்டப்பட்ட தாஜ்மஹால் சுவர்களுக்கு பின்னால் சீல் செய்யப்பட்ட சில அறைகள் உள்ளது. மேலும் தாஜ்மஹாலில் 1089 அறைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் மற்றொரு மாடியில் 22 அறைகள் உள்ளன. இதில் பல மர்மமான மூடிய கதவுகளும் உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Green Peas Benefits : பச்சை பட்டாணியை அடிக்கடி சாப்பிடுங்க... பல பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வா அமையும்
ABC Juice For Hair Loss : வெறும் ஏபிசி ஜூஸா குடிக்குறீங்க? கூடவே இந்த '4' பொருள் கலந்து குடித்தால் ஒரு முடி கூட உதிராது