திருச்சி அருகே திருவெள்ளறை புண்டரிகாஷ பெருமாள் திருக்கோவில் பின்புறம் உள்ள ஸ்வஸ்திக் வடிவ கிணற்றின் சிறப்புகளை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
திருச்சி அருகே திருவெள்ளறை திருத்தலம் ஒன்று உள்ளது. வெண் பாறைகளால் அமைந்ததால் அந்த கோவிலுக்கு ‘திருவெள்ளறை’ என்ற பெயரும் வந்தது. இங்கு புண்டரிகாஷ பெருமாள் திருக்கோவில், உயரமான மதிகளையும், பலவேறு அழகிய சிற்பங்களையும் கொண்டு அமைந்துள்ளது.
இந்த கோவில் திருவரங்கத்திற்கும் முற்பட்ட திருத்தலம் என்பதால் ‘ஆதி திருவரங்கம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த திருத்தலத்தின் நேர் பின்புறமாக 'ஸ்வஸ்திக் வடிவ கிணறு' ஒன்று உள்ளது. ஸ்வஸ்திக் வடிவம் என்பது ஆன்மிக குறியீடுகளில் ஒன்றாகும். இந்தக் கிணறு கி.பி. 8ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னனான நந்திவர்மன் காலத்தில், ஆலம்பாக்கத்து கம்பன் அரையன் என்பவரால் கட்டப்பட்டது. மேலும், இந்தக் கிணறு, ‘மார் பிடுகு கிணறு’ என்று அழைக்கப்படுவதாக, அதில் இருக்கும் கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன. அதுமட்டுமின்றி, நந்திவர்மனின் பெயர்களில் ஒன்றுதான் இந்த ‘மார்பிடுகு’ ஆகும்.
undefined
இதையும் படிங்க: Rasi Palan : இந்த 5 ராசி பெண்கள் தங்கள் கணவரின் குடும்பத்திற்கு அதிஷ்டத்தை கொண்டு வருவாள்..!
அதுபோல, இந்த ஸ்வஸ்திக் வடிவ கிணற்றுக்குள் செல்ல நான்கு பக்கங்களில் இருந்தும் இறங்கிச் செல்லும் வகையில் படிக்கட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நான்கு புற வாசல்களிலும் உள் பக்கத்தில் குறுக்காக நிலை கற்களும் வைக்கப்பட்டுள்ளன. இவை மூன்று படிநிலைகளாக காணப்படுகின்றன. அதாவது, கிழக்குப்பக்க வாசலின் முதன் நிலை படியில் நரசிம்மர் சிற்பமும், இரண்டாம் படிநிலையில், யானை வாகனத்தோடு ஐயனாரும், பூரணாம்பிகையும் மற்றும் மூன்றாம் படிநிலையில் இரண்டு அன்னப் பறவைகள் இடம்பெற்றுள்ளது.
இதன் தெற்குப்புற வாசலின், முதல் நிலைக் காலில் சப்த மாதர்கள் காட்சி தருகின்றனர். இரண்டாம் படி நிலையில் கொற்றவை, மற்றும் சிங்கம், மான் மீது இரண்டு துணை தேவியர் உள்ளனர். மூன்றாம்படி நிலையில் விநாயகரின் உருவம் உள்ளது. மேற்குப் புற வாசலின் முதல் நிலைக் காலில், கிருஷ்ண பகவான் சிறுவயதில் அசுரர்களை வதம் செய்த காட்சி இடம்பெற்றுள்ளன. இரண்டாம் நிலையில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத மகாவிஷ்ணு, மூன்றாம் நிலையில் இரண்டு மகர சிற்பங்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது. வடக்கு வாசலின் முதல் நிலைக்காலில், சிவபெருமான்-பார்வதியும், தேவர்களும் உள்ளனர். இரண்டாம் நிலைக் காலில் தட்சிணாமூர்த்தி, சனகாதி முனிவர்கள் உள்ளனர். மூன்றாம் நிலைபடியில் இரண்டு மகர தோரண அமைப்பு உள்ளது. நடுவில் யானை நடந்துவரும் சிற்பம் இருக்கிறது.
இதையும் படிங்க: வாஸ்து படி, வீட்டின் வடக்கு திசையில் இதையெல்லாம் வச்சா ஐஸ்வர்யம் பெருகுமாம்!
இந்த ஸ்வஸ்திக் வடிவ கிணற்றின் மேற்புறத்தின் ஒரு ஓரத்தில் சிவலிங்கம் ஒன்று உள்ளது. அது ஆவுடையார் இன்றி பாணம் மட்டும் உயர்ந்து காணப்படுகிறது. அதன் எதிரில் பெரியதும், சிறியதுமாக இரண்டு நந்திகள் கால்களை மடக்கி அமர்ந்த நிலையில் உள்ளது. அதன் அருகில் பழங்கால தெய்வத் திருமேனிகள் இருக்கும். தற்போது இந்த ஸ்வஸ்திக் வடிவ கிணறு, தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
திருச்சியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் திருவெள்ளறை திருத்தலம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D