இந்தப் பதிவில் சுவையான உருளைக்கிழங்கு கிரேவி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
எப்பவும் உங்கள் வீட்டில் காலையில் இட்லி தோசைக்கு சாம்பார், சட்னி தான் வைக்கிறீங்களா..? அதை தினமும் சாப்பிட்டு போர் அடிக்குதா..? உங்க வீட்ல உருளைக்கிழங்கு இருக்கா.. அப்போ இந்த கிரேவியை செய்யுங்கள். இந்து உருளைக்கிழங்கு கிரேவி இட்லி தோசைக்கு மட்டுமல்ல சப்பாத்தி பூரிக்கு கூட வைத்து சாப்பிடலாம். சுவை அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த கிரேவி செய்வது மிகவும் எளிது. உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என் அனைவரும் இந்த உருளைக்கிழங்கு கிரேவியை விரும்பி சாப்பிடுபவர்கள். ஒரு முறை செய்து கொடுங்கள் மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே சொல்லுவார்கள். சரி வாங்க இப்போது இந்த பதிவில் உருளைக்கிழங்கு கிரேவி எப்படி செய்வது என்று தெரிந்துகொள்ளலாம்..
உருளைக்கிழங்கு கிரேவி செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 2
பிரியாணி இலை - 1
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 3
சீரகம் - 1/2 ஸ்பூன்
சோம்பு - 1/2 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 1/2 ஸ்பூன்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
மல்லித் தூள் - 1 ஸ்பூன்
கெட்டி தயிர் - 1/4 கப்
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி, கருவேப்பிலை - சிறிதளவ
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கு கிரேவி செய்ய முதலில், எடுத்து வைத்த உருளைக்கிழங்கை வேக வைத்து, அதிலிருந்து தோலை நீக்கி, கையால் நன்கு மசித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை அடுத்து, ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், இப்போது அதில் பட்டை, கிராம்பு, பிரியாணி இல்லை, சோம்பு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்துக் கொள்ளுங்கள்.
இதனை அடுத்து அதில் போட்டியாக நறுக்கி வைத்த வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள். பிறகு இதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு அதில், மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் உங்கள் சுவைக்கு ஏற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி கொள்ளுங்கள். இப்பொழுது, எடுத்து வைத்த கெட்டி தயிரை நன்கு அடித்து, அடுப்பில் இருக்கும் மசாலா கலவையில் ஊற்றி இரண்டு நிமிடம் நன்கு கொதிக்க வையுங்கள்.
பிறகு மசித்து வைத்த உருளைக்கிழங்கை இதனுடன் சேர்த்து ஒரு முறை நன்கு கிளறி விடுங்கள். இப்போது இதில் உங்களுக்குத் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி ஐந்து நிமிடம் நன்கு கொதிக்க வையுங்கள். கிரேவி நன்கு வெந்ததும் அதன்மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி இறக்கினால் சுவையான உருளைக்கிழங்கு கிரேவி ரெடி!! இந்த ரெசிபியை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பார்த்து உங்களது பதிலை எங்களுக்கு தெரிவியுங்கள்...