முடி உதிர்வை தடுக்க.. ஒரு வாரத்தில் தலைமுடிக்கு எத்தனை முறை எண்ணெய் தேய்க்க வேண்டும் தெரியுமா?

By Kalai Selvi  |  First Published Jul 19, 2024, 4:52 PM IST

Hair Care Tips : நீங்கள் உங்கள் தலைமுடிக்கு ஒரு வாரத்தில் எத்தனை முறை எண்ணெய் தேய்த்தால், முடி உதிர்வை தடுக்கலாம் என்பதை குறித்து இந்த கட்டுரையில் காணலாம்.


ஒவ்வொரு பெண்களும் தங்களுக்கு அடர்த்தியான, பளபளப்பான மற்றும் நீளமான முடி வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், மோசமான வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததால் முடிவு வறட்சி, முடி உதிர்தல், பொடுகு தொல்லை மற்றும் பிற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். 

அதுவும் குறிப்பாக, முடி உதிர்தல் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. ஆனால்,  ஆரோக்கியமான கூந்தல் பராமரிப்பில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. எண்ணெய் முடிக்கு போதுமான அளவு ஊட்டச்சத்தை வழங்குவது மட்டுமின்றி, மயிர் கால்களில் ஆழமாக ஊடுருவி, முடியின் வேர்களை பலப்படுத்துகிறது. மேலும், இது உச்சந்தலைக்கு ஊட்டமளிப்பதோடு மட்டுமல்லாமல், முடியின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகிறது.

Tap to resize

Latest Videos

undefined

இருப்பினும் உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். அதாவது முடி உதிர்வை தடுக்க தலை முடிக்கு எப்போது, எப்படி, எவ்வளவு எண்ணெய் தடவ வேண்டும் என்றுதான். இந்த கேள்விக்கான விடையை இப்போது இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  தினமும் தலைக்கு குளிச்சா முடி அதிகம் கொட்டுமா..? உண்மை என்ன..?

தலைமுடிக்கு எப்போது எண்ணெய் தேய்க்க வேண்டும்?

1. கூந்தலின் வகையை பொறுத்து:
உங்கள் கூந்தல் வறண்டு இருந்தால் நீங்கள் வாரத்திற்கு 2 முதல் 3 முறை எண்ணெய் தேய்க்கலாம். ஒருவேளை உங்களுக்கு எண்ணெய் பசை கொண்ட தலைமுடி இருந்தால் நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே எண்ணெய் தடவினால் போதும். இவை இரண்டுமே இல்லாமல் நார்மலான தலைமுடி உங்களுக்கு இருந்தால் ஒரு வாரத்திற்கு 1 அல்லது 2 முறை எண்ணெய் தேய்கலாம்.

2. தலைமுடியில் பிரச்சனை இருந்தால்:
உங்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது என்றால், நீங்கள் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை எண்ணெய் தேய்க்கவும். இப்படி செய்தால் முடி உதிர்வு தடுக்கப்படும். மேலும், நீங்கள் பொடுகு பிரச்சனையை சந்தித்து வருகிறீர்கள் என்றால், வாரத்திற்கு 2 அல்லது 3 முறை எண்ணெய் தேய்க்கலாம்.

3. சுற்றுச்சூழலைப் பொறுத்து:
உங்களுக்கு அளவுக்கு அதிகமாக வியர்த்தால், நீங்கள் வாரத்திற்கு 2 அல்லது 3 முறை தலைமுடிக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். அதுபோல அதிகப்படியான வெப்பம் மற்றும் குளிர் காலநிலைகள் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டும் தலைமுடிக்கு எண்ணெய் தடவினால் போதும்.

இதையும் படிங்க: உங்களுக்கு நைட்ல தலைக்கு குளிக்கும் பழக்கம் இருக்கா..? அப்போ முதல்ல 'இத' கட்டாயம் படிங்க..

தலைமுடிக்கு என்னை தேய்க்கும் போது இந்த விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்:

  • நீங்கள் உங்கள் தலைமுடிக்கு ஏற்றவாறு சரியான எண்ணெயை மட்டும் பயன்படுத்துங்கள்.
  • தலை முடிக்கு எண்ணெய் தேய்ப்பதற்கு முன் அது சிறிதளவு சூடாக இருக்க வேண்டும்.
  • என்னை தேய்த்தபிறகு உங்கள் விரல்களை கொண்டு லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.
  • முக்கியமாக கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்தபிறகு சுமார் ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். அப்போதுதான் நல்ல பலன்களை பெறுவீர்கள்.
  • மேலும் தலைமுடிக்கு லேசான ஷாம்பு  மட்டும் பயன்படுத்துங்கள். 

தலை முடிக்கு எண்ணெய் தேய்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

  • தலைமுடிக்கு எண்ணெய் தடவினால் அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள், மயிர் கால்கள் மற்றும் தலை முடிக்கு சென்று, தலை முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
  •  மேலும், எண்ணெய் தலைமுடியில் ஈரப்பதத்தை தக்க வைத்து, வறட்சி மற்றும் முடி உதிர்தலையும் தடுக்கிறது.
  • கூந்தலுக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்தால், இரத்த ஓட்டம் மேம்படும். இதனால் மயிர் கால்களுக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!