Multani Mitti : முல்தானி மிட்டியை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால் சருமம் தொடர்பான பல பிரச்சினைகள் வரும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது குறித்து இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
பொதுவாகவே, எல்லா பெண்களும் தங்களது முகம் பார்ப்பதற்கு அழகாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள், தழும்புகளால் அவர்களின் அழகு குறைய தொடங்குகிறது. இதற்காக அவர்கள் பல விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமின்றி, அவ்வப்போது பார்லருக்கும் சென்று தங்களது முகத்தை ஃபேஷியல் செய்து கொள்கிறார்கள்.
ஆனால், பியூட்டி பார்லருக்கு செல்ல விரும்பாத பெண்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து தான் தங்களது அழகை பராமரிக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் முல்தானிமிட்டி. ஆம், முல்தானிமிட்டி முக அழகை பராமரிப்பது முக்கிய பங்கு வகிக்கிறது. மிகக் குறைந்த விலையிலேயே இது கடைகளில் கிடைக்கிறது. இது முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகளை நீக்கவும். முகத்தை எப்போதும் அழகாக வைக்கவும் உதவுகிறது.
undefined
ஆனால், முல்தானி மிட்டியை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால் சருமம் தொடர்பான பல பிரச்சினைகள் வரும் என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும், முல்தானி மிட்டியை பயன்படுத்துவதால் சில பிரச்சனைகளும் வரும். அவற்றை குறித்து இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
இதையும் படிங்க: Beauty Tips : கரும்புள்ளி மறைந்து முகம் பொலிவாக முல்தானி மெட்டியை 'இப்படி' யூஸ் பண்ணுங்க..!!
முல்தானி மிட்டியை பயன்படுத்தும் போது இவற்றை நினைவில் வையுங்கள்:
நீங்கள் முல்தானி மிட்டியை வாங்கும் போது உங்கள் சருமத்திற்கு ஏற்ப அதை தேர்ந்தெடுக்கவும். இல்லையெனில், நீங்கள் சரும வீக்கம், சிவத்தால் மற்றும் சொறி போன்ற பிரச்சனைகளை சந்திப்பீர்கள். அதுபோல, முல்தானி மிட்டியை முறையற்ற முறையில் பயன்படுத்தினால் முகத்தில் பருக்கள் ஏற்பட்டு முகம் பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். எனவே சரியான முல்தானி மிட்டியை தேர்வு செய்து, சரியான முறையில் பயன்படுத்துங்கள்.
இதையும் படிங்க: வெல்லம் சமையலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் தான்.. இப்படி யூஸ் பண்ணுங்க முகம் பளபளக்கும்!
முல்தானி மிட்டி தீமைகள்:
முல்தானி மிட்டி சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணெய்களை உறிஞ்சுவதால் வறண்ட சருமம் உள்ளவர்கள் முல்தானி மிட்டியை பயன்படுத்தாமல் இருப்பது ரொம்பவே நல்லது. ஒருவேளை பயன்படுத்த விரும்பினால், நீங்கள் அதை அதிகம் பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் சிலருக்கு முல்தானி மிட்டி ஒவ்வாமையை ஏற்படுத்தும். எனவே, நீங்கள் முல்தானிமிட்டியை பயன்படுத்துவதற்கு முன் பேட்ச் டெஸ்ட் செய்து பயன்படுத்துங்கள்.
சூரிய ஒளியை தவிர்க்கவும்:
நீங்கள் முல்தானி மிட்டியை பயன்படுத்திய பிறகு வெயிலில் சென்றால் அது உங்கள் சருமத்திற்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். அதுபோல, முல்தானி மிட்டியை உங்கள் சருமத்திற்கு நேரடியாக பயன்படுத்துவதை தவிர்க்கவும். அதற்கு பதிலாக, நீங்கள் மிட்டியுடன் ரோஸ் வாட்டர் அல்லது தயிர் சேர்த்து பயன்படுத்தலாம்.
முல்தானி மிட்டியை தினமும் பயன்படுத்தக் கூடாது ஏன்?
முல்தானி மிட்டியை தினமும் பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால், அது உங்கள் சருமத்தை வறட்சியாக்கும். நாளாக நாளாக உங்கள் முகம் கரடு முரடாக மாற ஆரம்பிக்கும். அதுபோல, உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமமாக இருந்தால் தினமும் முல்தானி மிட்டியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது உங்கள் சருமத்தை மோசமாக பாதிக்கும். நீங்கள் முல்தானி மிட்டியை பயன்படுத்த விரும்பினால், வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி பயன்படுத்தினால் சருமம் வறண்டு போகும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D