உங்களுக்கு பிறந்த  நாளா ? இதை மறக்காம செய்யுங்க .....

 
Published : Mar 06, 2017, 07:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
உங்களுக்கு பிறந்த  நாளா ? இதை மறக்காம செய்யுங்க .....

சுருக்கம்

do thisa on your birthday

உங்களுக்கு பிறந்த  நாளா ? இதை மறக்காம செய்யுங்க .....

பிறந்த நாள் வாழ்கையில் மிக சிறந்த நாள். நம்மில் பலரும், நம் பிறந்தநாளன்று, கோவிலுக்கு செல்வது வழக்கம் .ஒரு சிலர் சில ஆசிரமங்களுக்கு சென்று அதரவற்றோரை பார்த்து , தங்களால்  இயன்ற  உதவிகளை  செய்வது வழக்கம் .

சரி,ஆண்டில் ஒரு முறை வரக்கூடிய பிறந்த நாளன்று நாம்  எதை செய்ய  வேண்டும் , எதை செய்ய  கூடாது  என்பதை  பார்க்கலாம் .

பிறந்தநாளன்று ஒருவர் செய்யவேண்டியது என்ன ?

1) காலையில் சீக்கிரம் எழுந்து எண்ணை தேய்த்துக் குளிக்க வேண்டும்.

2) புத்தாடைகள் இருப்பின் அவற்றை பெரியோரிடம் தந்து குங்குமம் வைத்து வாங்கி அணியலாம். (ஆடைகளில் தோஷம் ஏதேனும் இருந்தால் குங்குமம் வைப்பது மூலம் அவை நீங்கிவிடும்).

3) பெற்றோர் மற்றும் மூத்தோரின் கால்களில் விழுந்து ஆசி பெறவேண்டும்.

4) அவர்கள் கையால் இனிப்புக்களை பெற்று அதை உண்ணவேண்டும்

5) குல தெய்வத்தின் கோவிலுக்கு செல்லவேண்டும்.

6) ஆலயத்தில் உங்கள் பெயர் ராசி நட்சத்திரப்படி அர்ச்சனை, அபிஷேக, ஆராதனைகள் செய்யவேண்டும்

7) வீட்டிலும் கோவில்களிலும் முடிந்த எண்ணிக்கையில் விளக்கேற்றவேண்டும்.

8) ஏழைகளுக்கு அன்னதானம்

9) கோ-பூஜை செய்வது சாலச் சிறந்தது. கோ-பூஜை செய்ய இயலாதவர்கள் பசுவுக்கு உணவளிக்கலாம்.

10) புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ள விரும்பினாலோ அல்லது புதிய வகுப்பில் சேர விரும்பினாலோ அன்று அதை செய்யலாம்.

11) அலுவலகத்தில் புதிய பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ளலாம்.

12) புதிய சொத்துக்கள் வாங்கலாம்.

13) வாகனங்கள் வாங்கலாம்

14) புதுமனைப் புகு விழா கிரஹப் பிரவேசம் செய்யலாம்.

இது போன்ற நல்ல விஷியங்களை  நம்  பிறந்த நாளில் செய்து வந்தால்  மிகவும் நல்லது

 

 

 

 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Parenting Tips : பெற்றோரே! 5 வயசு வரைக்கும் இந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்துடாதீங்க... ரொம்ப மோசமான பாதிப்பு
Pregnancy Diet : கர்ப்பிணிகளே உஷார்!! 'கருவை' தாங்கும் பெண்கள் சாப்பிடவே கூடாத பழங்கள்!!