உதட்டின் மேல் வளரும் முடி..... வேதனைப்படும் பெண்களாக நீங்கள் ...?

 
Published : Mar 06, 2017, 06:06 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
உதட்டின் மேல் வளரும் முடி..... வேதனைப்படும் பெண்களாக நீங்கள் ...?

சுருக்கம்

moustache for ladies

பொதுவாகவே  பெண்களுக்கு, சருமத்தில்  முடி வளர்வது  என்பது  அரிதானது .  அவ்வாறே  முடி  வளர்ந்தால் , வளரும் இடத்தை பொருத்து, அதனை  நீக்கிவிட்டு  பெண்களின் மேனியை அழகாக  வைத்துக்கொள்ள முடியும் .

குறிப்பாக  பல பெண்களுக்கு ,  தன்  உதட்டின்  மீது முடி  வளர்வது  எளிதாக  பார்க்க  முடியும் .  பார்ப்பதற்கு, சற்று  மீசை  வளர்ந்த  தோற்றம்  தெரியவந்தால்,  உண்மையில்  பெண்ணின்  மனம்  பாதிக்கும் . ஆதலால்  இதனை தவிர்க்கும் பொருட்டு, சில வழிமுறைகளை  பார்க்கலாம் .

எப்படி செய்வது ?

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும்.இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை , அதாவது 30 கிராம் சர்க்கரையை எலுமிச்சை சாறுடன்  சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து, முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வந்தால், முடியின் வளர்ச்சியானது தடைபடும்.

இதேபோன்று, கடலை மாவு, தயிர், மஞ்சள் தூள் இது ஒரு பாரம்பரிய முறை என்றும் சொல்லலாம். ஏனெனில் இந்த முறையை அக்காலத்தில் இருந்து பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். அது என்ன முறையெனில்,  கடலை மாவு,  தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப்படியாக குறையும்.

பப்பாளி மற்றும் மஞ்சள் பப்பாளி மற்றும் மஞ்சள் தூளை ஒன்றாக கலந்து, அதனை முகத்தில் முடி வளரும் இடத்தில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும். இதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.

உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கு ஒரு சிறப்பான ப்ளீச்சிங் ஏஜெண்ட். இதனை துவரம் பருப்பு பொடியுடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், நாளடைவில் முகத்தில் உள்ள முடியின் நிறமானது மங்க ஆரம்பிக்கும்.

 மேற்குறிப்பிட்ட எதையாவது ஒன்றை நாம் தினமும்  செய்து வந்தால் நாளடைவில் அழகிய தோற்றம்  பெற முடியும் , தேவையில்லாத  சரும முடிகள்  வளர்வதையும்  தடுக்க  முடியும் 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த விஷயங்கள் எப்போதும் திருப்தியே தராது- சாணக்கியர்
படுக்கையறையில் 'சிலந்தி செடி' வைங்க;நன்மைகள் பெருகிக் கொண்டே இருக்கும்