கொதிக்கும் நீரில் துளசி, மஞ்சள் கலந்து குடிங்க ... வித்தியாசத்தை உணருங்கள்....

First Published Mar 4, 2017, 5:25 PM IST
Highlights
we should drink manjal matrum thulasi to avoid cancer


கொதிக்கும் நீரில் துளசி, மஞ்சள்  

 உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு பானம்  ஒன்று உள்ளது . அது தான் மஞ்சள் தூள் கலந்த துளசி நீர். இந்த நீரில் ஏராளமான நன்மைகள்   உள்ளது

பானம் தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் நீர்   ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, அதில் சிறிது துளசி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, ஒரு கொதி விட்டு இறக்கினால்  பானம்  ரெடி

அடிக்கடி சளி  பிடித்தால் என்ன செய்வது ? 

அடிக்கடி சளி பிடிப்பவர்கள் இந்த நீரை குடித்து வந்தால், அதில் உள்ள மருத்துவ குணங்கள் நுரையீரலில் உள்ள அழற்சி மற்றும் சளித் தேக்கத்தைக் குறைத்து, சளி பிடிப்பதைத் தடுக்கும்

துளசி நீரில் மஞ்சள் கலந்து குடித்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுபட்டு, நிம்மதியாக சுவாசிக்க உதவும்.

இந்த இயற்கை பானம் சிறுநீரகங்களில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சிறுநீரகங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ளும்.துளசி பானத்தை ஒருவர் தினமும் காலையில் குடித்து வந்தால், நரம்புகள் அமைதியாகி, மூளையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மன அழுத்தத்தில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்

தினமும் காலையில் மஞ்சள் கலந்த துளசி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், சைனஸ் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படும் தலைவலியில் இருந்து விடுபடலாம்.

இந்த இயற்கை பானத்தை ஒருவர் தினமும் குடித்தால், தற்போது பலரைத் தாக்கும் பல்வேறு புற்றுநோய்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். இதற்கு அவற்றில் உள்ள சக்தி வாய்ந்த பைட்டோ நியூட்ரியண்ட்டுகள் தான் காரணம் என்பது  குறிப்பிடத்தக்கது . 

எனவே , இயற்கையான  முறையில் நம்  வீட்டில் இருந்தபடியே  இது போன்ற ஆரோக்கியமான  பானத்தை நாமே தயார் செய்து  பருகலாம் 

 

click me!